You can now apply online to build a house in Tamil Nadu
தமிழகத்தில் வீடு கட்ட இனி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது..!
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி போன்ற இடங்களில் கட்டாயம் கட்டுமான பணிக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் அனுமதி பெற்ற பின்னால் மட்டுமே குடிநீர், மின்சாரம், கழிவுநீர், மழை நீர் சேகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
இணையதளம் மூலம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது ஏற்கனவே சென்னை மாநகராட்சி போன்ற இடங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து கட்டுமானங்கள் கட்டலாம்.
இப்பொழுது நகராட்சியிலும் அதே போன்று நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது இதில் பல்வேறு மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி போன்ற இடங்களில் நீங்கள் கட்டுமான பணிகள் தொடங்குகிறீர்கள் எனில் அதற்கு www.onlineppa.tn.gov.in என்கின்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் இந்த விவகாரத்தின் அடிப்படையில் உடனடியாக.
அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்படும், இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட எந்த அரசு அலுவலகத்திற்கு நீங்கள் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இல்லை அனைத்தும் இணையதளம் மூலம்.
கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள்
இனி வரும் காலங்களில் கட்டியிடம் முடிந்த பிறகு அதற்கான முடிவு சான்றிதழ் பெற தேவையில்லை அது முற்றிலும் விளக்கு அளிக்கப்படுகிறது பரிசீலனை கட்டணம் கட்டமைப்பு வசதி கட்டணங்களில் இருந்து முழுவதும் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இனி நீங்கள் உங்களுடைய நிலத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கு அனைத்து நடைமுறைகளும் விளக்கு அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
8 வீடுகள் வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் பெற தேவையில்லை அதிகம் உயரம் இல்லாத கட்டிடங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பு 39 அடியாக இருந்தது தற்போது அது 46 அடியாக மாற்றப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இணையதளம் மூலம் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்து விட்டார்.
மக்கள் அனைத்தையும் சரியாக பின்பற்ற வேண்டும்
வீடுகள் கட்டுவதில் மற்றும் விண்ணப்பம் செய்வதில் பல்வேறு மாற்றங்கள் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது இதனை மக்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது நீங்கள் சட்டத்தை பயன்படுத்தினால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் மற்றும் பணி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
இணையதளம் மூலம் அனைத்து வசதிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது உடனடியாக அனுமதியும் கிடைக்கும் ஆனால் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும் ஆய்வின் போது விண்ணப்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் அரசு உறுதியுடன் இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |