கல்வி கடன் வாங்கப் போகிறீர்களா?எந்த வங்கியில் வட்டி விகிதம் எவ்வளவு உள்ளது..!Which bank is lowest interest rate education loan in india

Which bank is lowest interest rate education loan in india

பெற்றோர்களை இதனை கவனியுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கடன் வாங்கப் போகிறீர்களா?எந்த வங்கியில் வட்டி விகிதம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

நம் தமிழகத்தில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பாக 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்வி பயிலும் மாணவ மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மருத்துவம், பொறியியல், சட்டம்,போன்ற படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் சிலர் உள்நாட்டில் படிப்பை தொடர்கிறார்கள் சில மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பை தொடர்கிறார்கள்.

ஆனால் இந்த மாணவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த பணத்தில் கல்வி கற்க செல்கிறார்களா?என்றால் நிச்சயம் இல்லை இதில் 90% மாணவர்கள் வங்கிகளில் கடன்கள் பெறுகிறார்கள்.

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொண்டால் கல்வி கடன் வாங்குவது பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்படும்.

ICICI Bank of India

இந்தியா மற்றும் வெளிநாட்டு கல்விக்கான கடன்களுக்கு இந்த வங்கியில் வட்டி விகிதங்கள் 10.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதாவது இந்த வங்கியில் நீங்கள் வங்கி கணக்கு வைத்து இருந்தால் அதனுடைய International debit card or credit card பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் பணம் பெற முடியும் இந்த வங்கி உலகம் முழுவதிலும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது.

State Bank of India

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரண்டு வகைகளில் கல்விக்கடன் வழங்குகிறது அதாவது உள்நாட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன்களுக்கு 8.15 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது, அதேபோல் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10.15 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

Union Bank of India

இந்த வங்கியும் இரண்டு வகைகளில் கல்விக்கடன் வழங்குகிறது யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்நாட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 8.1சதவீத முதல் 12.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 9.25 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

Axis Bank

ஆக்சிஸ் வங்கியில் கல்விக் கடன் மற்ற வங்கிகளை விட சற்று அதிகமாக வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 13.7 சதவீதம் முதல் 15.2 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.

Bank of India

உள்நாட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த வங்கியில் 9.35 சதவீதம் முதல் 11.85 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு 10.05 சதவீதம் முதல் 11.85 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது அன்று இலவசமாக 10 பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது..!

Punjab National Bank

இந்த வங்கியில் உள்நாட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 8.25 சதவீதம் முதல் 12.75 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு 9.25% முதல் 12.75 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.

Bank of Baroda

இந்த வங்கியிலும் உள்நாடு மற்றும் வெளிநாடு என இரு பிரிவுகளின் கீழ் கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது அதற்கேற்றார் போல் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது  உள்நாட்டில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 8.45 சதவீதம் முதல் 13.05 சதவீதம் வரையிலும் சர்வதேச கல்விகளுக்கு 9.70 சதவீதம் முதல் 13.7 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment