When will tnpsc group 4 answer key be released
TNPSC Group-4 Answer Key எப்போது அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் என்ற தகவல் கற்பது கசிந்துள்ளது…!
தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனியாக செயல்பட்டு வருகிறது தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்றவற்றை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது.
குரூப்-1 தேர்வு என்பது குடிமை பணி தேர்வு அதாவது மத்திய அரசு நடத்தும் குடிமை பணி தேர்வுக்கு இணையான தேர்வை மாநில அரசு நடத்துகிறது துணை மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட வனக்காப்பாளர், இப்படி மிக முக்கியமான பணிகளுக்கு குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் தேர்வாளர்கள் குறிப்பிட்ட காலபணி அனுபவம் பெற்ற பிறகு நேரடியாக மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பதவிகள் வழங்கப்படுகிறது குரூப்-1 தேர்வு, குரூப் 2, குரூப் 3, குரூப் 4, குரூப் 5, குரூப் 6, குரூப் 7, குரூப் 8, இப்படி பல்வேறு தேர்வுகள் தமிழகத்தில் நடைபெறுகிறது.
சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பாளர்கள், இப்படி பல்வேறு பணியிடங்களுக்கும் நேர்முக தேர்வு நடைபெறுகிறது தற்போது இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டு.
பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் இணையதள மூலம் வரவேற்கப்பட்டது கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முழுவதும் 7247 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது,இந்த தேர்வுக்கு 20 லட்சம் நபர்கள் விண்ணப்பித்த நிலையில்.
15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் தேர்வை எழுதியுள்ளார்கள் தேர்வு முடிந்ததும் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது அதாவது சில கேள்விகள் குழப்பம் வகையில் இருந்ததாக தேர்வாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டார்கள்.
புதிதாக அறிமுகம் படுத்தப்பட்டுள்ள முறை
இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் (Invalid Marks) என்ற முறையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது அதாவது ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்த பிறகு அதை அடித்து விட்டு வேறு ஒரு பதிலை தேர்வு செய்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் வழங்கப்படாது.
எந்த எழுத்தில் எத்தனை விடைகள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்
அதேபோல் A,B,C,D என ஒவ்வொரு எழுத்துக்கும் எத்தனை விடைகள் குறிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி அதையும் மொத்தமாக பதிவிட வேண்டும் என தேர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இதற்காக தனியாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடந்த முடிந்த TNPSC Group-4 தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தால் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்..!
தேர்வு முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தனி நபர்களும், தனியார் மையங்களும், இந்த தேர்வுக்கான (Answer Key) எனப்படும் விடை குறிப்புகளை சமூக வலைத்தளங்களிலும், தங்களுடைய இணையதள பக்கத்திலும், யூ டியூப் பக்கத்திலும், whatsapp சேனலிலும், வெளியிட்டு வருகிறார்கள்,எனினும் அரசு பணியாளர் தேர்வாணியும் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான விடை குறிப்புகள் வெளியிடப்படவில்லை.
எப்பொழுது விடை குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான (Answer Key) எப்பொழுது வெளியாகும் என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் தேர்வாளர்கள் கேட்டு வருகிறார்கள் இது குறித்து நாம் TNPSC வட்டாரத்தில் விசாரித்த போது.
இந்த வாரத்தில் விடை குறிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளது,வெளியிடப்படும் தற்காலிக விடை குறிப்புகள் குறித்து தேர்வாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதனை அவர்கள் ஆதாரத்துடன் தெரிவித்தால் அவை சரிபார்க்கப்பட்டு சரியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்த முடிந்த TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பிப்ரவரி மாதம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மார்ச் மாதம் பணியிடத்திற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்படும் என TNPSC சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |