What to do if the PAN card does not reach your address by post
பான் கார்டு விண்ணப்பித்த பிறகு தபால் மூலம் உங்களுடைய முகவரிக்கு வரவில்லையா என்ன செய்ய வேண்டும்..!
பான் கார்டு (PAN card) என்பது மிக முக்கியமான ஆவணமாக மத்திய அரசு கருதுகிறது வருமானவரித்துறையினால் 10 இலக்கு எண் கொண்ட அட்டையாக பான் கார்டு வழங்கப்படுகிறது.
6 மாத குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம், இந்த பான் கார்டு இருந்தால் மட்டுமே உங்களால் வங்கி கணக்கு தொடங்க முடியும், வாகனங்கள் வாங்க முடியும், நிலம் வாங்க முடியும் விற்பனை செய்ய முடியும்.
குறிப்பிட்ட தொகைக்கு மேல் நகைகள் வாங்க முடியும், வருமானத்தை நேரடியாக கணக்கீடு செய்வதற்கு வருமானவரித்துறையினால் வழங்கப்படும் அடையாள அட்டை சான்றாக பான் கார்டு உள்ளது,இதனை நீங்கள் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி
பான் கார்டு விண்ணப்பிப்பது எளிது உங்களுடைய 2 புகைப்படம், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் மக்கள் சேவை மையம் மூலம் பான் கார்டு விண்ணப்பித்து விடலாம் விண்ணப்பம் செய்து 3 நாட்களில் இ பான் கார்டு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து அதனை நீங்கள் உங்களுடைய ஒரிஜினல் பான் கார்டு போலவே பயன்படுத்தலாம்,ஒரு மாதம் அல்லது நான்கு வாரங்களில் ஒரிஜினல் பான் கார்டு உங்களுடைய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும் .
பான் கார்டு வரவில்லை என்றால் என்ன செய்வது
உங்களுடைய பான் கார்டு தபால் மூலம் உங்களுடைய முகவரிக்கு வரவில்லை என்றால் நீங்கள் நீங்கள் (020) 272018080 இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது உங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம். .
நீங்கள் விண்ணப்பித்து ஒரு மாதம் முடிந்த நிலையில் 3 நாட்களில் இ-பான் கார்டு இணையதளம் மூலம் பெற்று விடலாம் அதனை வருமானவரித்துறை அலுவலகத்தில் காண்பித்து புகார் மனு கொடுக்கலாம்.
அல்லது சென்னையில் இருக்கின்ற வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் மூலம் புகார் கொடுக்கலாம் (6A 6th Floor,Kences Towers #1 Ramakrishna Street North Usman Road T.Nagar Chennai 600017) வருமான வரி துறையின் ஈமெயில் ஐடிக்கு relations@nsdl.com புகார் கொடுக்கலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |