What is TNPSC Group 5A Exam and what is the Eligibility
டிஎன்பிஎஸ்சி குரூப் 5A தேர்வு என்றால் என்ன மற்றும் இந்த தேர்வுக்கான தகுதி என்ன..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகளை நடத்தி வருகிறது,இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
நீங்கள் அரசு வேலைக்கு செல்ல விருப்பப்படும் நபராக இருந்தால் தமிழகத்தில் அரசு வேலைக்கான தேர்வுகள் எப்பொழுது நடைபெறுகிறது, எந்த பதிவிகளுக்கு நடைபெறுகிறது, அதற்கான சம்பளம், கல்வித் தகுதி, பாடத்திட்டம், போன்ற அனைத்து விவரங்களையும்.
முழுமையாக நீங்கள் தெரிந்துக்கொண்டால் மட்டுமே அரசு வேலைகளை பெறமுடியும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) GROUP-1 TO GROUP-8 Exams வரை தேர்வுகளை நடத்துகிறது இதில் எந்தெந்த குரூப்களுக்கு எப்பொழுது தேர்வு நடைபெறுகிறது.
அதற்கான கல்வி தகுதி, வேலை தமிழகத்தில் எந்த மாவட்டங்களில்,எந்த பதிவிகளுக்கு வழங்கப்படுகிறது, போன்றவற்றை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும் இந்த கட்டுரையில் (TNPSC) GROUP-5A தேர்வு என்றால் என்ன? அதற்கான பாடத்திட்டம், சம்பளம் முறை, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விதமான தகவல்களையும் முழுமையாக காணலாம்.
TNPSC GROUP-5A தேர்வு என்றால் என்ன?
தமிழக அரசின் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கிறது இதில் குரூப் 5A தேர்வு அடங்கும்.
TNPSC GROUP-5A என்ன பதவிகள்
இந்த Group-5A தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழக அரசின் தலைமை செயலகத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள் குறிப்பாக செயலக உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer in Secretariat) பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது, தலைமைச் செயலக அலுவலகத்தில் சட்டம் மற்றும் நிதித்துறை தவிர மற்ற துறைகளில் இந்தத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
TNPSC GROUP-5A Education Qualification
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தேர்வுக்கு இளங்கலை பட்டம் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும், இதனுடன் ஜூனியர் அசிஸ்டன்ட் அல்லது அசிஸ்டன்ட் அல்லது இரண்டு பதிவிகளையும் சேர்த்து குறைந்தது ஐந்தாண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும், நீங்கள் நீதித்துறைக்கு விண்ணப்பிக்கக்கூடிய நபராக இருந்தால் பொருளாதார அல்லது வணிகம் அல்லது புள்ளியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
TNPSC GROUP-5A AGE Limit
இந்த Group-5A தேர்வுக்கு விண்ணப்பிக்கக்கூடிய நபர்கள் அதிகபட்சமாக பொது பிரிவினருக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும் மேலும் மற்ற பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது, இதைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்கின்ற தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
TNPSC GROUP-5A Selection Method
இந்த GROUP-5A பதிவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இங்கு நேர்காணல் இல்லை GROUP-5A தேர்வு பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களை கொண்டிருக்கும்.
பொது தமிழ் 100 மதிப்பெண்களுக்கும் பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும், தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும் இதில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
TNPSC GROUP-5A Syllabus Details
கட்டுரை எழுதும் திறன்
வினாக்களுக்கு தெளிவான சரியான சுருக்கமான விடை அளிக்கும் திறன்
விரிவான குறிப்பை சுருக்கி எழுதும் திறன்
சுருக்க குறிப்புகளில் இருந்து விரிவாக்கம்
ஆங்கில பகுதியை தமிழில் மொழிபெயர்த்தல்
அறிக்கை எழுதும் திறன்
மொழித்திறன் கண்டறிதல்
வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் (இணைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரே தொடர் அமைத்தல், அகர வரிசைப்படுத்துதல், பிழை நீக்கி எழுதுதல், கலை சொல்லாக்கம்)
TNPSC குரூப் 3 தேர்வு என்றால் என்ன மற்றும் எந்தெந்த பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது..!
இந்தத் தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்கள் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வாராயிலான சமச்சீர் கல்வி புத்தகங்களை படித்தால் போதுமானது இதில் இருந்துதான் 95 சதவீத வினாக்கள் கேட்கப்படும் அதனுடன் கடைசியாக நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்கள் மற்றும் மாடல் வினாத்தாள்களை படித்தால் போதும்.
TNPSC GROUP-5A Salary Details
இந்தப் பணியிடங்களுக்கு உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு உதிய நிலை 16 இன் கீழ் ரூபாய் 36,400/- முதல் ரூபாய் 1, 34,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் உதவியாளர் பதவிக்கு ஊதிய நிலை 9ன் கீழ் ரூபாய் 20,000/- முதல் ரூபாய் 73,700/- வரை மாத சம்பளம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |