What is TNPSC GROUP 4 and who can apply for this exam
TNPSC GROUP-4 என்றால் என்ன? இந்த தேர்வுக்கு கல்வி தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனியாக செயல்பட்டு வருகிறது இங்கு பல்வேறு விதமான தேர்வுகளும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டு.
அதில் திறமையான தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் பணியமர்த்தப்படுகிறார்கள் TNPSC எனப்படும் Group 1 to Group 8 நடத்தப்படுகிறது TNPSC ஒவ்வொரு குரூப்பிற்கு ஏற்ப வேலை வாய்ப்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், பணியிடங்கள், உள்ளிட்டவைகள் மாறுபடுகிறது இந்த கட்டுரையில் TNPSC-4 என்றால் என்ன இந்த பணியிடத்திற்கு ஏன் தமிழகத்தில்.
அதிகமான இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள், இந்த பணியிடத்தில் எத்தனை வேலை வாய்ப்புகள் உள்ளது, எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன, உள்ளிட்டவைகள் அனைத்தையும் காணலாம்.
அரசு பணி என்பது பாதுகாப்பானது 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சம்பளம் கிடைக்கும் பதவி உயர்வு, சனி ஞாயிறு விடுமுறை, முக்கியமான பண்டிகைகளுக்கு சரியான நேரத்தில் விடுமுறை, அரசு பணி பாதுகாப்பானது, மாண அழுத்தம் இல்லாதது, போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் அரசு பணியை நோக்கி படையெடுக்கிறார்கள்.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களிடையே அரசு பணியில் சேர்வதற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எனப்படும் தேர்வில் நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்கிறார்கள்.
தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயாராகி வருகிறார்கள் நேரடியாக பணி நியமனம் செய்த காலம் போய் இன்று தகுதி வாய்ந்த இளைஞர்களை TNPSC தேர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு குரூப் வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது அதில் ஒன்றுதான் குரூப் 4 தேர்வு.
குரூப்-4 தேர்வு என்றால் என்ன?
தமிழ்நாடு வாக்கு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு அமைச்சு பணி, உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து கிராம நிர்வாக அலுவலர், ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுவதே குரூப்-4தேர்வு.
இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்,வனக் காவலர் மற்றும் வன காவலர் பழங்குடி இளைஞர் ஆகிய பதவிகளுக்கு வேலை வாய்ப்புகளும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கிறது.
இந்த TNPSC குரூப் 4 தேர்வில் முக்கியமாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடத்திற்கு இளைஞர்கள் இடையே கடுமையான போட்டி இருக்கிறது,ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர், போன்ற பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது
இதற்கான கல்வி தகுதி என்ன யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 தேர்வு எழுத கல்வி தகுதி என்பது குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது 18 வயது முதல் 37 வயது வரை உள்ள அனைவரும் தகுதியுடையவர்.
இதில் ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது, வயது வரம்பை பொருத்தவரை VAO தேர்வுக்கு மட்டும் 21 வயது முதல் 32 வயது வரை இருக்கக்கூடிய நபர்கள் விண்ணப்பிக்கலாம் இதில் சில பணியிடங்களுக்கு சில பிரிவினர்களுக்கு வயது வரம்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வின் மதிப்பெண்கள் என்ன?
குரூப்-4 தேர்வை ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேர்வாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப எழுதலாம், இங்கு 200 வினாக்களை கொண்ட எழுத்து தேர்வு முறை ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண் விதம் மற்றும் 300 மதிப்பெண் அனைத்தும் (Objective Answer Type) தேர்ந்தெடுக்கப்பட்ட வினாவாக இருக்கும்.
குரூப்-4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும் அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படும் மீதமுள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும் அதில் 75 பொது அறிவு வினாக்கள் 25 திறனறிவு தேர்வு வினாக்களும் இருக்கும்.
எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அழைக்கப்படுவார்கள்,இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதன்முதலில் (invalid mark) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது..!
அதாவது நான்கு விடைகளில் ஏதாவது ஒன்றை முதலில் தேர்ந்தெடுத்து விட்டு அதை அடித்து விட்டு மறுபடியும் மற்றொரு விடையை தேர்ந்தெடுத்தால் அந்த கேள்விக்கான விடை சரியாக இருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் தொடக்கத்தில் 19,500/- முதல் அதிகபட்சமாக 62,000/- ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும், குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேரும் நபர்களுக்கு குறிப்பிட்ட கால அனுபவத்திற்கு பிறகு பதிவு உயர்வு வழங்கப்படும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |