ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயரை இரண்டே நிமிடத்தில் எளிமையாக மாற்றி விடலாம்..!What is the procedure family head name in Ration Card

What is the procedure family head name in Ration Card

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயரை இரண்டே நிமிடத்தில் எளிமையாக மாற்றி விடலாம்..!

நம்மளுடைய குடும்பங்களுக்கும் அல்லது தனிப்பட்ட மனிதர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள சில ஆவணங்களில் அவ்வப்போது திருத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு இணையதளம் மூலம் வீட்டில் இருந்து செய்து விடலாம், மத்திய மாநில அரசுகள் மக்கள் அரசு அலுவலகத்திற்கு சென்று சிரமங்களை சந்திக்க கூடாது என்று அனைத்தையும் இணையதளம் ஆக்கிவிட்டது.

உங்களுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு வரி, கரண்ட் பில்,போன்ற முக்கியமான ஆவணங்களில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இணையதள மூலம் எளிமையாக செய்து கொள்ளலாம் அதற்கான ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது அரசுகள்.

குடும்பத் தலைவரின் பெயர் மாற்றம் செய்வது எப்படி

நீங்கள் முதலில் தமிழக அரசின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவேண்டும் அதில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் என்கின்ற தேர்வினை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் உங்கள் ரேசன் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அங்கு உள்ளீடு செய்ய வேண்டும், அதற்கு கீழே உள்ள கேப்சர் குறியீட்டினை சரியாக பதிவு செய்ய வேண்டும் அதன் பின்னர் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கு (OTP) எண் வரும் அதனை பதிவு செய்தால் உங்கள் பக்கம் login ஆகிவிடும்.

அதனைத் தொடர்ந்து குடும்ப தலைவர் பெயர் மாற்றம் செய்வதற்கான தேர்வுகள் இருக்கும் அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் யாருடைய பெயரை குடும்பத் தலைவராக மாற்ற வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் நீங்கள் குடும்பத் தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேராக உள்ள சிறிய பாக்சை கிளிக் செய்து டிக் செய்ய வேண்டும்.

இதன் பிறகு நீங்கள் குடும்பத் தலைவராக மாற்ற செய்ய விரும்புவோரின் ஆதார் அட்டை, இறப்புச் சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒரு சான்றிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களை..!

மேலும் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (1 MB) அளவுக்குள் கட்டாயம் இருக்க வேண்டும் அதையும் நீங்கள் புகைப்படம் இருக்கும் பாக்ஸில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் இவை அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கை வெற்றிக்காரமாக பதிவேற்றம் செய்வதற்கான தகவல்கள் திரையில் தோன்றும்.

அதனை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது உங்களுக்காக சில எண்கள் வழங்கப்படும் அதனை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய கோரிக்கை நிலையை முகப்பதில் சென்று அட்டை தொடர்பான சேவை நிலைய என்பதை தேர்வு செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment