TNPSC குரூப் 4 கேள்வித்தாளின் முறை என்ன..!What is the pattern of TNPSC group 4 question paper in tamil

What is the pattern of TNPSC group 4 question paper in tamil

TNPSC குரூப் 4 கேள்வித்தாளின் முறை என்ன?

நீங்கள் அரசு பணிக்கு செல்வதற்கு தயாராகுகிறீர்களா? அரசு பணி என்பது உங்களுடைய இலக்கா அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் மூன்று  ஆண்டுகள் தயாராக வேண்டும் குறிப்பாக மிக எளிமையான தேர்வாக இருக்கும் Group 4 தேர்வுக்கு.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தயாரானால் மட்டுமே வெற்றி பெற முடியும் அப்படி வெற்றி பெற்றாலும் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை இந்த Group 4 தேர்வு மிகவும் எளிமையானது.

கல்வித் தகுதி 10ம் வகுப்பு போதும் ஆனால் தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் ஒரு பணியிடத்திற்கு தோராயமாக 330 நபர்கள் போட்டியிடுகிறார்கள் என்கிறது சர்வே 2024 ஆம் ஆண்டு மொத்தம் 6244 பணியிடங்கள் தேர்வு எழுதிய நபர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து விட்டது.

இவ்வளவு கடினமான போட்டி இருக்கும்பொழுது நிச்சயம் அனைவருக்கும் கடுமையான சவால் இது, இந்த Group 4 தேர்வு எப்படி நடத்தப்படுகிறது எவ்வளவு மார்க்குக்கு நடத்தப்படுகிறது எவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

Group 4 Exam Pattern Details

இந்த Group 4 வினாத்தாள் வடிவமைப்பு என்பது அனுபவம் வாய்ந்த வல்லுனர்களால் வடிவமைக்கப்படுகிறது கேள்வி வகை மற்றும் மதிப்பெண் திட்டம் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்த கொள்ள வேண்டும், 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் உள்ள வினாத்தாள்கள் அனுமதிக்கப்படுகிறது மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இந்த Group 4 தேர்வில் தமிழ் மொழிதாளில் 150 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது அதில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் 95 மதிப்பெண்கள் எடுத்தால் நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு நடைபெறும் TNPSC Group 2,2A தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்..!

தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு 100 கேள்விகள் ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் விதம் மொத்தம் 150 மதிப்பெண்கள் பொது ஆய்வுகள் 75 கேள்விகள் மற்றும் திறன் மற்றும் மன திறன் தேர்வு 25 கேள்விகள் மொத்தம் 150 மதிப்பெண்கள்.

தமிழ் மற்றும் பொதுத்தாள் இரண்டும் சேர்ந்து 300 மதிப்பெண்கள் இதில் 170க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment