What is the cut off score in 2024 tnpsc group 4 exam to get job
TNPSC Group-4 தேர்வில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கட் ஆப் மதிப்பெண் அதிகமாக எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..!
கடந்த ஜூன் 9ம் தேதி நடந்த முடிந்த TNPSC Group 4 தேர்வை பற்றி தான் அதிகமான தேடல்கள் இணையதளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இருக்கிறது காரணம் TNPSC Group 4 தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள இளைஞர்களிடையே கடுமையான போட்டி இருக்கிறது.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த தேர்வுக்கு தகுதி உடையவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 2024 ஆம் ஆண்டுக்கான Group 4 தேர்வு கடந்த 9ம் தேதி தமிழக முழுவரிலும் 7244 மையங்களில் நடைபெற்றது.
20 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள் ஆனால் 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் தேர்வை எழுதினார்கள், தேர்வு எழுதிய பிறகு பல்வேறு செய்திகள் வெளிவருகிறது அதாவது தேர்வில் தேர்வாளர்களை குழப்பம் வகையில் சில வினாக்கள் இருந்ததாகவும்.
அதற்கான விடைகள் என்ன என்று தேர்வாளர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை முன் வைத்தார்கள், மேலும் இந்து முன்னணி அமைப்பும் தேர்வில் திமுக அரசு மத ரீதியான பிரச்சனை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது.
6244 காலிபணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்டது இதனுடைய முடிவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் பிப்ரவரி மாதம் ஆவணங்கள் சரிபார்க்கப்படும், மார்ச் மாதம் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும், என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது,ஆனால் இன்னும் காலிபணியிடங்கள் அதிகரிக்க கூடும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் அதிகமாக தேடும் தேடல்
இந்த தேர்வு குறித்து இணையதளத்தில் அதிகமாக தேர்வாளர்கள் சில விவரங்களை தேடி வருகிறார்கள் அதாவது எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் இந்த தேர்வில் வெற்றி பெற முடியும் வேலை கிடைக்கும் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடப்படவில்லை இருந்தாலும் முந்தைய தேர்வில் வெளியிடப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தோராயமான சில மார்க்குகளை தனியார் அமைப்புகள் வெளியிடுகிறார்கள்.
கடந்த வருடங்களுடைய வினாத்தாள்களை விட இந்த வருடம் அவ்வளவு சுலபமாக இல்லை எனவும் தமிழைப் பொறுத்தவரை 88 இலிருந்து 92 வரை மதிப்பெண் எளிதில் பெற முடியும் 95 பெரும் பட்சத்தில் அது நல்ல மதிப்பெண் ஆக அமையும் என தனியார் பயிற்சி மையங்கள் தெரிவிக்கிறது.
தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது இலக்கணம் இலக்கியம் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது,25 மதிப்பெண்கள் கணக்கு பாடத்திலிருந்து கேட்கப்படும் ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கணக்கு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
இதில் 20 கேள்விகளுக்கு எளிமையாக பதில் அளிக்க கூடியதாக இருக்கிறது 7 கேள்விகளுக்கு அதிகமாக யோசிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது, பொது அறிவைப் பொறுத்தவரை சுலபமாக இருந்தாலும், ஒரு 10 கேள்விகள் தரமாக கேட்கப்பட்டிருந்தது விடை அளிப்பதற்கு சற்று சிரமமாக இது இருக்கும்.
தற்போதைய நிகழ்வை பொறுத்தவரை கேள்விகள் TNPSC தரத்தை தாண்டி (SSC) போன்ற மத்திய அரசு தேர்வுக்கான தரத்தில் கேட்கப்பட்டிருந்தது தொடர்ந்து நாட்டு நடப்புகளையும் செய்தித்தாள்களை வாசித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் இது எளிமையாக பதில் அளிக்க முடியும்.
170 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களுக்கும் நிச்சயம் தேர்வில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என தனியார் பயிற்சி மையங்கள் அறிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |