தான செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன இது எதற்காக எழுதப்படுகிறது இதனால் என்ன நன்மைகள் ஏற்படுகிறது..!What is thana Settlement Bond and and what are its benefits

What is thana Settlement Bond and and what are its benefits

தான செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன இது எதற்காக எழுதப்படுகிறது இதனால் என்ன நன்மைகள் ஏற்படுகிறது..!

நம் நாட்டில் நிலம் சம்பந்தமான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கிறது குடும்ப சொத்துக்களை அனைத்து நபர்களுக்கும் சரிசமமாக பிரிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு சொத்து சம்பந்தமான வழக்குகளில் சில சட்டங்கள் திருத்தப்படுகிறது தான பத்திரம் என்றால் என்ன?இது எதற்காக எழுதப்படுகிறது இதனால் யாருக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

தான செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன?

தான செட்டில்மெண்ட் பத்திரம் என்பது தனக்கு சொந்தமான ஒரு காலி மனைவியோ அல்லது வீடு அல்லது விவசாய நிலத்தை ரத்த சம்பந்தம் உள்ள நெருங்கிய உறவினர்களுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர முறைதான் தானா செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும்.

இதில் தனக்கு சொந்தமான சொத்தை மட்டுமே ஒரு நபர் மற்றொரு நபருக்கு ரத்த சொந்தத்தில் எழுதிக்கொடுக்க முடியும், குடும்ப சொத்தை அல்லது பரம்பரைய சொத்தை அந்த நபர் எழுதிக் கொடுக்க முடியாது.

இந்த சொத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அரசு மதிப்பீட்டி தொகையில் 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 29,000/- ரூபாய் பத்திரப்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் என்ன?

தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்வதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது

ஆதார் அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை

ஓட்டுநர் உரிமம்

பட்டா சிட்டா

அசல் பத்திரம்

வில்லங்க சான்று

வீட்டு வரி ரசீது

சொத்து வரி ரசீது

சாட்சிகள்

தான செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா?

உங்களுடைய சொத்துக்களை தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் உங்களுடைய ரத்த உறவினர்களுக்கு எழுதிக் கொடுப்பதற்கு முன்பு இதைப்பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் இது பற்றிய தீர்ப்பை வழங்கியுள்ளது அதாவது தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டால் அதை மறுபடியும் திரும்ப பெற முடியாது என்று உறுதிப்பட சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும் நபர் தன்னுடைய பிள்ளைகள் மீது அல்லது ரத்த சொந்தங்களின் மீது இருக்கும் கடுமையான கோபத்தில் மற்றொரு ரத்த சொந்தத்திற்கு பத்திரப்பதிவு செய்து விடுகிறார் பின்னாளில் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகு.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றினால்..!

மறுபடியும் தனக்கு அந்த சொத்து வேண்டும் என்று முறையிடுகிறார் ஆனால் இதனை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது நீங்கள் தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுப்பதற்கு முன்பு நன்றாக சிந்தித்து பத்திர பதிவு செய்ய வேண்டும்.

ஒரு முறை நீங்கள் பத்திரப்பதிவு செய்துவிட்டால் அடுத்த நிமிடமே அந்த நிலம் அல்லது வீடு அல்லது விவசாய தோட்டம் உங்களுக்கு சொந்தமில்லாமல் போய்விடும்,மறுபடியும் நீங்கள் அதை திரும்பப் பெற முடியாது நீதிமன்றத்திற்கு சென்றாலும் வழக்கு வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தான செட்டில்மெண்ட் யார் யாருக்கு எழுத முடியும்

தான செட்டில்மெண்ட் பத்திரம் அம்மா அப்பா இவர்களின் பிள்ளைகள் மற்றும் அப்பா அம்மா அவர்களின் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள், சகோதரர்கள், சித்தப்பா மகள், சித்தப்பா மகன், பெரியப்பா மகள், பெரியப்பா மகன், மாமன் மகள், அத்தை மகள், இப்படி உறவினர்களுக்குள் மட்டுமே தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிய முடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment