What is Invalid Mark in TNPSC Group 4 Exam
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் என்றால் என்ன?
இன்று தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் முதன் முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய முறையை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இன்வேலிட் (Invalid) மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது சில தேர்வாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்வேலிட் (Invalid) மதிப்பெண் என்றால் என்ன?
தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு மொத்தம் 6,244 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது கிராம நிர்வாக அலுவலர், வன காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வாக உதவியாளர், இளைநிளை நிர்வாகி கூட்டுறவு சங்கங்களின் இளைநிளை ஆய்வாளர், துறைகளின் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், என பல்வேறு பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப் 4 தேர்வு காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது,தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதும் நபர்கள் மையத்திற்கு வர வேண்டும் என முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குரூப்4 தேர்வில் பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும்.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பேன் விதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது அதோடு புதிதாக இன்வேலிட் (Invalid) மதிப்பெண் என்ற முறையும் இந்த தேர்வில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது முதன் முதலில் இந்த ஆண்டு.
அதாவது தேர்வு எழுதும் நபர் ஒரு கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலைக் குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் வழங்கப்படாது இன்வேலிட் (Invalid) மதிப்பெண்ணாக மாறிவிடும்.
கல்வி கடன் வாங்கப் போகிறீர்களா?எந்த வங்கியில் வட்டி விகிதம் எவ்வளவு உள்ளது..!
இந்த புதிய முறை குறித்து தேர்வு மையங்களில் இன்று தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது முன்னதாக நுழைவுச்சீட்டிலும் இந்த விதிமுறை குறித்து குறிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
தற்போது 6,244 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என அரசு வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கிறது, இந்த குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை நிச்சயம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |