What is beema patta land and what is meaning b memo
பீமா பட்டா என்றால் என்ன? நீங்கள் வாங்கும் நிலம் உண்மையில் பத்திரப்பதிவு செய்தால் உங்களுக்கு கிடைக்குமா..!
தமிழகத்தில் நிலம் வாங்குவது, விற்பனை செய்வது, அரசு நிலத்தை போலி பத்திர ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து மற்றவருக்கு விற்பனை செய்வது வெளிநாடுகளில் தங்கி இருக்கும் நபர்களின் நிலங்களை.
போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்வது நிலத்தின் உரிமையாளருக்கே தெரியாமல் அவருடைய நிலத்தின் மீது கடன் வாங்குவது, நிலத்தை அடமானம் வைப்பது நிலத்தை விற்பனை செய்ய விடாமல் பிரச்சனை செய்வது.
இப்படி பல்வேறு வகையான பிரச்சனைகள் இருக்கிறது நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் என்றால் அந்த நிலத்திற்கு பல்வேறு விதமான பட்டா இருக்கிறது, குறிப்பாக பீமா பட்டா நிலத்தை நீங்கள் வாங்கினால் அல்லது விற்பனை செய்தால் நீங்கள் நிச்சயம் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
புறம்போக்கு நிலம் என்றால் என்ன ?
புறம்போக்கு நிலம் என்பது இது அரசாங்க நிலம் இதில் யாரும் விவசாயம் செய்ய முடியாது ஆறுகள்,ஏரிகள், ஓடை, குளம், குட்டை, மலை,சாலைகள் அருகில் இருக்கும் நிலம், பள்ளிக்கூடங்கள் நிலம், இந்த நிலங்களில் விவசாயம் செலவு செய்ய முடியாது.
இந்த நிலத்தை யாரும் விற்பனை செய்யவும் முடியாது இது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் அதனால் இந்த நிலத்தை புறம்போக்கு நிலம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் ஆறு, ஏரி, கால்வாய், அணைகள், அருகே உள்ள புறம்போக்கு நிலங்கள் இருக்கிறது இந்த நிலங்களுக்கு புல எண்கள் இருக்கும்.
மலைகள் குன்றுகள் அருகே உள்ள புறம்போக்கு நிலங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அல்லது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும், யாராவது வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நிலங்களை அனுபவித்து வந்தால்.
அதற்கு தண்டத்தொகை வசூலிக்கப்படுகிறது இதில் ஒன்றுதான் (B Memo) இது ஒரு ஆவணம் கிடையாது அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழக்கூடியவர்கள் அல்லது ஏதோ ஒரு நோக்கமாக அங்கே குடிப்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய (B Memo) நோட்டீஸ் இது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அதிகமான வருடங்கள் இருந்தால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இடத்தினை கட்டாயம் காலி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்படும் இதனை (B Memo) எனப்படும், இந்த நோட்டீஸ் தந்து அவர்களை வெளியாகி போக சொல்லுவார்கள் இதுதான் பின்னாளில் பீமா பட்டா என்று ஆகிவிட்டது.
நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
நீங்கள் நிலத்தை வாங்கும் போது (B Memo) பட்டா நிலம் என்று தெரிந்தால் அதனை வாங்க வேண்டாம் என்று அரசு தெரிவிக்கிறது அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் நோட்டீஸ் (B Memo) என்பதால் அதை வாங்காமல் தவிர்த்து விடலாம்.
ஒருவேளை அதனை நீங்கள் வாங்கினால் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் அதனை கையகப்படுத்திக் கொள்ளும் நீங்கள் நீதிமன்றம் சென்றாலும் உங்களுக்கு அங்கு அந்த நிலம் கிடைக்காது என்று நீதிமன்றம் தெரிவித்து விடும்.
அதேபோல் (B Memo) போன்ற ரசீதுகளை வைத்திருப்போர் புறம்போக்கு நிலத்தின் மீது உரிமை கோரி நீதிமன்றம் செல்லலாம் ஆனால் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அல்லது அரசு திட்டங்களுக்கு தேவைப்படுவதாக அந்த நிலம் இருந்தால் இந்த நிலங்களை அரசாங்கம் எப்பொழுது வேண்டுமானாலும் கையகப்படுத்திக் கொள்ளும்.
பலங்குடியினர் மலைசாதியினர் போன்றோர் புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும் அவர்களுக்கு அந்த நிலத்திற்கு உரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |