What happened in the AIADMK executive meeting
கட்சியின் உச்சபட்ச மொத்த அதிகாரமும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று விட்டது இனி யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..!
அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் முக்கியமானது.
கட்சியின் உச்சபட்ச அதிகாரம் பொதுச் செயலாளர் எடப்பாடியிடம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலில்.
எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும், கட்சியின் கூட்டணி குறித்து அவர் மட்டுமே முடிவு எடுப்பார் கட்சியின் அனைத்து அதிகாரமும் அவரிடம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது திமுக மற்றும் பாஜகவிற்கு கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதிமுகவை எப்படியாவது பிளவுபடுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் பாஜகவின் திருட்டுத்தனமான நோக்கம் என்பது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதிமுகவை காப்பாற்றி வருவது எடப்பாடி பழனிசாமி அவரை எதுவுமே செய்ய முடியாமல் திமுக மற்றும் பாஜக திணறி வருகிறது.
இப்பொழுது நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அனைத்து அதிகாரமும் அவரிடம் வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு இரண்டு கட்சிகளுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
அடுத்த சில மாதங்களில் தமிழக முழுவதிலும் சுற்றுப்பயணம் 38 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், வார்டு நம்பர்கள், கிளை செயலாளர்கள், போன்றவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு கட்சியை பலப்படுத்த வேண்டும்..!
இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட வேண்டும் குறிப்பாக கூட்டணி என்பது பலமாக இருக்க வேண்டும் கட்சியை வலுப்படுத்தினால் அனைத்தும் சரியாக நடக்கும் என்பது அதிமுகவின் திட்டம்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் 38 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் நிச்சயம் கட்சி வலுப்பெற்றுவிடும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம் போன்றவர்கள் நிலைமை கேள்விக்குறியாக இருக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |