புதிய வீடு கட்டுகிறீர்களா மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன கட்டணங்கள் என்ன..!What are the procedures for getting a new electricity connection in TN

What are the procedures for getting a new electricity connection in TN

புதிய வீடு கட்டுகிறீர்களா மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன கட்டணங்கள் என்ன..!

நீங்கள் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? அதற்கான ஆவணங்கள் என்ன கட்டணங்கள் எவ்வளவு என்பதை பற்றி அனைத்து விதமான தகவல்களையும் இந்த கட்டுரைகளுக்கானலாம்.

முதலில் நீங்கள் மின் இணைப்பிற்கு தேவையான விண்ணப்ப படிவம் 1-ல் விண்ணப்பிக்கவும் மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த விண்ணப்ப படிவத்தில் உங்களுடைய அனைத்து தகவல்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கு நீங்கள் தான் சட்டப்படி உரிமையாளர் என்பதற்கான ஆவணத்தை நீங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

மின் இணைப்பு பெறும் இடத்திற்கு நீங்கள் உரிமையாளர் இல்லாமல் இருந்தால் உரிமையாளரிடம் இருந்து படிவம் 5ன் படி உரிமையாளரிடம் கடிதத்தை நீங்கள் பெற்றுத்தர வேண்டும்.

அப்படி அவர் கொடுக்க மறுத்து விட்டால் சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கான சான்றிதழ்களை நீங்கள் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வசிக்க கூடிய நபராக இருந்தால் மாநில அரசின் மற்ற சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்கள் மேற்கொள்ளும் போது அரசு அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உங்கள் பகுதியில் உள்ள மின்சார அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் அல்லது மற்ற நபர்களுக்கு மின்சாரம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுடைய நிலப்பகுதியில் இருந்தால் அதற்கு நீங்கள் இலவசமாக அனுமதி வழங்க வேண்டும்.

உங்கள் கட்டிடத்தில் மின் பணிகள் மேற்கொள்வதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற்ற நபர்களை நீங்கள் பணிக்கு அமர்த்த வேண்டும் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்றால் மின் பொறியாளரை அணுகி மேற்பார்வையிட அழைக்க வேண்டும்.

அவர் அனைத்தும் மேற்பார்வையிட்ட பிறகு அனுமதி அளிக்கப்பட்டால் அந்த ஆவணத்தை வைத்து நீங்கள் மின் இணைப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம்.

மூன்று நாட்களில் மின் இணைப்பு தற்போது இருக்கும் காலகட்டங்களில் கிடைத்துவிடும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தேவையான ஆவணங்கள் என்ன

பட்டா சிட்டா அல்லது பத்திரப்பதிவு

சொத்து வரி ரசீது

விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையதுதான் என்பதற்கான சான்றிதழ்.

TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்திய புவியியல் வினா விடைகள்..!

விண்ணப்பதாரர் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து படிவம் 5 போன்ற பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில் தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் அதிகமான மின் அளவு தேவை என்றால் அவர்கள் அதற்குரிய படிவங்களை பிடிஎஃப் வடிவில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை

பான் கார்டு

புகைப்படம்

ரேஷன் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

டிரைவிங் லைசன்ஸ்

இருப்பிடச் சான்றிதழ்

போன்ற ஆவணங்களும் தேவைப்படலாம்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment