Vijay has given important advice to his party members
விஜய் தனது கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்..!
சீமான் உள்ளிட்ட தலைவர்களை மற்றும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் யாரையும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் விமர்சிக்க கூடாது என்று விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் கட்சி நிர்வாகிகளுடன் இன்று விஜய் கட்சி அலுவலகத்தில் சந்திப்பை நடத்தினார் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
அதில் தனது கட்சியின் கொள்கைகளை பற்றி வெளியிட்டார் மேலும் பாஜக மற்றும் திமுக என்பது என்னுடைய இரண்டு எதிரிகள் கொள்கை ரீதியாக என தெரிவித்தார் இது திமுகவிற்கும் பாஜகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் அதிமுகவை பற்றியும் காங்கிரஸ் பற்றியும் விமர்சிக்கவில்லை மேலும் தமிழ் தேசியமும் மற்றும் திராவிடமும் என்னுடைய இரண்டு கண்கள் நாம் மக்களுக்கு நன்மை செய்வதை பற்றி மட்டும் யோசிக்க வேண்டும்.
ஜாதி மதம் இனம் போன்றவற்றை பற்றி யோசிக்க கூடாது அதனை முன் நிறுத்தக் கூடாது என தெரிவித்தார் மேலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய் அண்ணா,பெரியார் உள்ளிட்டவர்கள் தொடங்கிய கட்சியை இன்று ஒரு குடும்பம்.
திராவிட மாடல் என்று தமிழ்நாட்டை சூறையாடுகிறது என திமுக விமர்சனம் செய்தார் இது திமுகவிற்கு உச்சகட்ட ஆத்திரத்தை ஏற்படுத்தியது பாஜகவும் திமுகவும் மறைமுகமாக கூட்டணியில் உள்ளார்கள் என்பதையும் தெரிவித்தார்.
இதை திமுகவால் சகிக்க முடியவில்லை ஏனென்றால் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தலித் மக்களிடத்தில் என்ன சொல்லி வாக்கு கேட்பது என்பதில் இப்படி இருக்கிறார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்கிறார் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்ற அளவில் விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடத்திய முக்கியமான ஆலோசனைக் கூட்டம்
நடிகர் விஜய் இன்று தனது மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் அப்பொழுது யார் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் நீங்கள் யாரையும் பற்றி முக்கியமாக ஆபாசமாகவும் பேசக்கூடாது கண்டிப்புடன் இருங்கள்.
சீமான் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது அனைத்து கட்சிகளிடம் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டார்..!
கட்டுப்பாடு நமக்கு மிக முக்கியம் நம்மளுடைய கட்சி கொள்கை கோட்பாடுகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லுங்கள் மற்றவற்றைப் பற்றி யோசிக்க வேண்டாம் மற்றவர்கள் பேசுவதை பற்றி கவனிக்க வேண்டாம்.
செயற்கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் இதில் நான் கலந்து கொள்கிறேன் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை உடனடியாக தொடங்குங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |