Viduthalai Pathiram Endral Enna Pathiram Eappadi Ealuthuvathu
விடுதலை பத்திரம் எண்றல்? என்ன பத்திரம் ஏப்படி எழுதுவது..!
நம் நாட்டில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை பங்கு இருக்கிறது என்று சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஒரு குடும்பத்தில் சொத்துக்களை சரிசமமாக பிரிப்பது என்பது தற்போது அவ்வளவு எளிதாக முடிவதில்லை.
குறிப்பாக பெண் பிள்ளைகளின் கணவர்கள் தங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று மனைவியை கேட்க வற்புறுத்துகிறார்கள் மற்றும் சில பெண் பிள்ளைகள் தாய் வீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி வந்து விடுகிறார்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில்.
பரம்பரை சொத்துக்களை அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுத்து அதற்கு பத்திரப்பதிவு செய்வது என்பது தற்போது பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
உங்களுடைய குடும்ப சொத்து மக்கள் நடமாட்டம் அதிகம் இடத்தில் குறைந்த அளவில் சொத்து இருக்கிறது ஆனால் உங்கள் குடும்பத்தில் 6 நபர்கள் இருக்கிறார்கள் இந்த சொத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்தால் யாருக்கும் பயன் கிடைக்காது.
அதனால் மற்ற நபர்கள் யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துக் கொடுக்கலாம் இதுவே விடுதலை பத்திரம் அதாவது பரம்பரை சொத்தை இனிவரும் காலத்தில் நான் உரிமை கோர மாட்டேன் மனப்பூர்வமாக இந்த சொத்தில் எனக்கு இருக்கும் பங்கை.
என்னுடைய சகோதரர் அல்லது சகோதரிகளுக்கு நான் விட்டுக் கொடுக்கிறேன் என்று பத்திரத்தில் எழுதிக் கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் எழுதிக் கொடுத்தவர் மறுபடியும் தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டால்.
சட்டப்பூர்வமாக பங்கு கொடுக்க முடியாது அவர் நீதிமன்றம் சென்றாலும் ஒரு முறை விடுதலை புத்திரத்தில் எழுதிக் கொடுத்து விட்டால் மறுமுறை அந்த சொத்தில் பங்கு கேட்க முடியாது என்பது நம்மளுடைய இந்திய சட்டத்தில் இருக்கிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் இந்த விடுதலை பத்திரம் மூலம் யாருக்கு சொத்தை எழுதிக் கொடுக்கிறீர்களோ அவர் நினைத்தால் மட்டுமே மறுபடியும் இந்த சொத்தை உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் மறுபடியும் காவல் துறையில் புகார் அளித்து உரிமை கோரினாலும் அது சட்டபூர்வமாக செல்லாது.
ஒருவேளை இந்த விடுதலை பத்திரம் நீங்கள் எழுதிக்கொடுத்த பிறகு அது பத்திரப்பதிவு செய்யாமல் இருந்தால் நீங்கள் மறுபடியும் உரிமை கோர முடியும், நீங்கள் எழுதிக் கொடுத்த பிறகு அரசு பத்திரப்பதிவில் இது பத்திர பதிவு செய்தால் மறுபடியும் உங்களால் அதை உரிமை கோர முடியாது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |