Various youtube channels united against DMK
திமுகவிற்கு எதிராக ஒன்றிணையும் பல்வேறு youtube சேனல்கள்..!
திமுக ஆட்சியில் உங்களுடைய கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறதா என்றால் நிச்சயம் ஆட்சிக்கு எதிராக யாராவது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்பட்டால் உடனடியாக கைது இல்லை என்றால் சங்கி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.
தற்போது பல்வேறு youtube சேனல்களும் திமுக மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள், யூட்யூப் நடத்தக்கூடிய பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
திமுகவுக்கு எதிராக பல்வேறு youtube சேனல்கள் ஒன்று இணைந்து விட்டார்கள் தேர்தலில் கண்டிப்பாக இந்த youtube சேனல்களின் தாக்கம் திமுகவிற்கு எதிராக இருக்கும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது
அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறிய பிரச்சனை என்றாலும் திமுகவின் யூடியூப் சேனல்கள் மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றிவிடும் பல்வேறு சேனல்களும் செய்திகள் வெளியிட்டாலும் நேர்காணல் நடத்தினாலும்.
முன்னால் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிரித்துக்கொண்டே வெளியேறிவிடுவார் யார் மீதும் வழக்குகள் பதியப்படவில்லை சுதந்திரமாக youtube சேனல்கள் செயல்பட்டது, பத்திரிக்கைகளும் செயல்பட்டது.
திமுக ஆட்சியில் அப்படி இல்லை
திராவிட மாடல் ஆட்சியில் யாராவது குறை கூறினால் அவர்களை நோட்டமிட்டு இணையதளத்தில் கருத்துக்களை பதிவிடுவது அவர்களுக்கு எதிராக, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடுமையான ஆபாசமான,விமர்சனங்களை திமுகவின் இணையதள கூலிப்படை முன்வைக்கிறது.
திமுக கூட்டணியில் திமுக கட்சியிடம் மட்டுமே (IT WING) செயல்படுகிறது திமுகவுக்கு எதிராக இருக்கும் அதிமுக, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய், பாமக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளிடம் வலுவான (IT WING) இருக்கிறது.
இதனை சமாளிக்க முடியாமல் இப்பொழுது திமுக திணறி வருகிறது குறிப்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சியின், (IT WING) ங்கை திமுகவினால் சமாளிக்க முடியவில்லை.
நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அவருடைய படங்கள் அனைத்தும் திரையிடப்பட்ட பிறகு தீவிரமாக அரசியலில் களம் இறங்குவார்.
அப்பொழுது அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் திமுகவின் ஊழல் குறித்து விமர்சனங்களை முன்வைப்பார்கள் நடிகர் விஜய் மாநாடு நடத்துவது தொடர்பாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
விஜய் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் மிகப்பெரிய மாநாடு நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளார் அவர் எங்கு சென்று நிலம் கேட்டாலும் காலையில் கொடுக்கிறேன் என்று சம்மதம் தெரிவிக்கும் நிலம் உரிமையாளர்கள்.
மாலையில் தொலைபேசி மூலம் அழைத்து எங்களை மன்னித்து விடுங்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தால் எங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று மிரட்டுகிறார்கள் எங்களுடைய நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு நிலம் கொடுப்பதற்கு எங்களுக்கு சம்மந்தம் ஆனால் உண்மை என்னவென்று உங்களுக்கும் தெரியும் அதனால் நீங்கள் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள் என்று நில உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஜய் மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், உள்ளிட்ட இடங்களில் நிலங்கள் கிடைக்காமல் இருக்கிறார், இதற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து ஒரு சவுக்கு சங்கரை பார்த்து இந்த திமுக பயப்படுகிறது என்னையும் பார்த்து பயப்படுகிறது.
விஜய் அரசியலில் நுழைந்தால் திமுகவிற்கு ஆபத்து என்று அவருக்கு மாநாடு நடத்துவதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நடிகர் விஜய், அதிமுக, நாம் தமிழர் கட்சி, சவுக்கு சங்கர் மற்றும் இன்னும் சில கட்சிகள் ஒன்றிணைந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு மறைமுகமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |