TNPSC மூன்று மாதத்தில் முடித்து விடும் ஆனால் அந்தப் 10402 பணியிடங்களை வேண்டுமென்று நிரப்பப்படாமல் வைத்திருக்கிறார்கள்..!Vacancies for SC ST Community people are not filled by TNPSC

Vacancies for SC ST Community people are not filled by TNPSC

TNPSC மூன்று மாதத்தில் முடித்து விடும் ஆனால் அந்தப் 10402 பணியிடங்களை வேண்டுமென்று நிரப்பப்படாமல் வைத்திருக்கிறார்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு 10402 பணியிடங்களை கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10402 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது ஏன் என்ற கேள்வியை திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார் என்று தமிழகத்தில் பல்வேறு அரசின் துறைகளில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு.

ஒதுக்கப்பட்டு தகுதியானவர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு ஏராளமான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதில் தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியல் இனத்தவர் மக்களுக்கு 8,100 காலி பணியிடங்களும் பழங்குடியினர் மக்களுக்கு 2302 பின்னடைவு பணியிடங்களும்.

நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது இதன்பிறகு இந்த பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை

இந்தப் பணியிடம் குறித்து அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் முன்னேற்றமும் இதுவரை இல்லை தமிழக அரசின் தலைமை செயலாளராக இதற்கு முன்பு பதவி வகித்த இறையன்பு அவர்கள்.

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பின்னடைவு பணியிடங்கள் நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி இருந்தார்.

தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை கண்டுபிடித்த தேசிய பட்டியல் இனத்த ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் அறிக்கையை வெளியிட்டார் அதில் தமிழகத்தில் காலியாக உள்ள 10402 பணியிடங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் கட்டாயம்.

TNPSC group 4 கணித பாடத்திட்டத்தின் முழு விவரங்கள் PDF..!

நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் அந்த ஆணையத்தை கூட தமிழக அரசு மதிக்கவில்லை இன்றுவரை பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

இந்த பின்னடைவு பணியிடங்கள் சரியான காலகட்டத்தில் நிரப்பப்பட்டு இருந்தால் 10402 குடும்பங்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு இருக்கும் என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment