Udyam registration benefits of small scale industry
மின்சார கட்டணம், கடனுக்கான வட்டி, அரசு டெண்டர்கள், போன்றவைகளில் சலுகைகள் கிடைக்க சிறு குறு தொழில் நடத்தும் நபர்கள் கண்டிப்பாக இதனை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்தியாவில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் மற்றும் இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு அரசு பல்வேறு சலுகைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லலாம் இந்தியாவின் ஜிடிபி (GDP) யில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் வேலை வாய்ப்பிலும் இந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
இதற்கு அரசு பல்வேறு முக்கியத்துவம் கொடுத்தாலும் இதனை வழி நடத்துவதற்கு MSME என்று தனியாக ஒரு அமைச்சகம் செயல்பட்டுவருகிறது இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இவர்களை ஊக்குவிப்பதற்கு அரசு உதயம் Udyam Registration என்ற இணையதளத்தை கொண்டு வந்துள்ளது.
நீங்கள் சிறு குறு தொழில் செய்யக்கூடிய நபராக இருந்தால் உங்களுடைய வணிகத்தின் லாபத்தை அதிகரிப்பதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
உதயம் பதிவு என்றால் என்ன?
உதயம் பதிவு என்பது சிறு குறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான இணையதள பதிவு தளமாகும் இதனை MSME அமைச்சகம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளை பெற முடியும்.
உதயம் பதிவு செய்வது கட்டாயம் இல்லை என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்பது அதிகம் இதனை ஆங்கிலத்தில் Udyam Registration என்று அழைக்கிறார்கள்.
ஏன் கட்டாயம் பதிவு செய்தால் நன்மை
அரசு திட்டங்கள், அரசு சலுகைகள், அரசு உதவிகள் நிச்சயம் கிடைக்கும் உதயம் பதிவு செய்வதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்களுக்கான மானியங்கள் மற்றும் வங்கிகளில் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வெளியிடப்படும் டென்டர்களில் கலந்து கொள்வதற்கு கட்டாயம் இந்த Udyam Registration இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஒரு உத்தரவு இருக்கிறது.
பல அரசு டெண்டர்கள் உதயம் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கே MSME வழங்கப்படுகிறது உதயம் பதிவு செய்வது அனைத்து இலவசம் எந்தவித கட்டணங்களும் இங்கு வசூலிக்கப்படுவதில்லை.
உங்களுடைய விற்பனையை அதிகரிக்கலாம்
Udyam Registration செய்த நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் விற்பனையை தொடங்கலாம்,இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் நீங்கள் சென்றடைய முடியும்,இது உங்களுடைய சந்தை மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கிறது.
வங்கிகளில் எளிமையாக கடன் பெற முடியும்
இந்த உதயம் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்திருந்தால் வங்கிகள் கண்டிப்பாக உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் கடன் பெறுவது எளிமை வட்டி விகிதங்களில் நீங்கள் குறைந்த கடன் பெற முடியும்.
மின்சார கட்டணங்களில் சலுகை கிடைக்கிறது
Udyam சான்றிதழ் வைத்திருப்பதால் மின்சார கட்டணங்களில் பல சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்குகிறது,உதயம் பதிவு செய்த நிறுவனங்கள் வருமான வரி சலுகைகள் மற்றும் பிற சலுகைகளை பெற தகுதி உடையவை.
அரசே கொள்முதல் செய்து கொள்கிறது
பல்வேறு அரசு கொள்முதல்களில் பங்கேற்க கூடிய நபர்கள் MSME பதிவு சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் நீங்கள் உதயம் பதிவு செய்வதன் மூலம் ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதி செய்யலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் என்றால் என்ன?
உங்களுடைய வணிகத்தை விரிவுபடுத்த சிறந்தது
உதயம் பதிவு செய்து பல்வேறு வணிக வாய்ப்புகளை பெற முடியும், வணிகத்தை பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு மாவட்டங்களிலும் நிறுவ முடியும் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் உங்களுடைய வணிகத்திற்கு.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |