To get high cut off marks in TNPSC Group 4 VAO Exam
TNPSC குரூப் 4 VAO தேர்வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவது எளிது, ஆனால் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று வேலை வாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதல்ல.
ஒரு பணியிடத்திற்கு 340 அல்லது 350 நபர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது தற்போது இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடந்தது முடிந்து விட்டது மீண்டும் அடுத்த ஆண்டு குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முடியாது அல்லது குறைவான மதிப்பெண்கள் பெற முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கக்கூடிய நபர்கள் தொடர்ந்து அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயாராகி வரலாம்.
இந்தக் கட்டுரையில் கீழே அரசியல் அறிவியலில் முக்கியமான வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதனை நீங்கள் புரிந்து கொண்டு ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும் எளிமையாக விடை அளித்து விடலாம்.
பண மசோதாவிற்கும் சாதாரண மசோதாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு
சாதாரண மசோதா
நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகம் செய்யலாம்
அமைச்சர் அல்லது தனிநபர் அறிமுகம் செய்யலாம்
குடியரசு தலைவரின் முன் அனுமதி தேவையில்லை
மாநிலங்களவை மறுக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம்
மாநிலங்களவை இதனை 6 மாதம் வரை தாமதப்படுத்தலாம்
மக்களவையில் இருந்து மாநிலங்களவை அனுப்பும் போது சபாநாயகரின் ஒப்புதல் தேவை இல்லை
பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் உண்டு
குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பலாம்
TNPSC தேர்வில் வெற்றி பெற தாவரவியல் முக்கியமான வினா விடைகள்…!
பண மசோதா
மக்களவையில் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்
அமைச்சரால் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்
குடியரசு தலைவரின் முன் அனுமதி தேவை
மாநிலங்களவை மறுக்கவோ அல்லது திருத்தம் செய்யவும் முடியாது
அதிகபட்சம் 14 நாட்கள் மட்டுமே மாநிலங்களவையால் தாமதப்படுத்த முடியும்
மக்களவையில் இருந்து மாநிலங்களுக்கு அனுப்பும் போது சபாநாயகரின் ஒப்புதல் தேவை
பெரும்பாலும் கூட்டுக் கூட்டம் கிடையாது
குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்ப இயலாது
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |