TNPSC Group 4 Invalid Mark முறையால் தேர்வாளர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது..!TNPSC Group 4 Invalid Mark System is likely to reduce marks

TNPSC Group 4 Invalid Mark System is likely to reduce marks

TNPSC Group 4 Invalid Mark முறையால் தேர்வாளர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது இந்த ஆண்டு புதிதாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு Invalid Mark முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனால் தேர்வாளர்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் கூட இந்த Invalid Mark முறை பதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையான தகவல், ஏன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த முறையை அறிமுகப்படுத்தி உள்ளது என்றால் வினாத்தாள்கள் திருத்தும் பணி விரைவாகவும் எளிமையாகவும் நடைபெறுவதற்கு.

இந்த Invalid Mark முறை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என கருதி உள்ளது இதற்கு முன்பு தேர்வாளர்கள் (OMR) சீட்டில் A, B, C, D போன்ற தேர்வுகளில் ஏதாவது ஒன்றை முதலில் தேர்வு செய்து விட்டு பிறகு அதை அடித்து விட்டு மறுபடியும் வேறு ஒன்றை தேர்வு செய்கிறார்கள்.

இதனால் கணினி மூலம் (OMR SHEET)தாள் திருத்தும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இதனை சரி செய்யவே தற்போது இந்த Invalid Mark  முறை கொண்டு வரப்பட்டுள்ளது தேர்வுகளில் ஏதாவது ஒன்றை டிக் செய்துவிட்டு மறுபடியும் அடித்து விட்டு சரியானதை தேர்வு செய்தாலும் அந்த வினாக்கள் மதிப்பெண்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒருமுறை டிக் செய்து விட்டால் அவ்வளவுதான் அதற்கான விடை அது சரியாக இருந்தாலும் சரி தவறாக இருந்தாலும் சரி மறுபடியும் அடித்து விட்டு டிக் செய்தால் அந்த வினாவுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது, இந்த முறையால் எளிதில் வினாத்தாள்கள் வேகமாக திருத்த முடியும் ஆனால் பாதிக்கப்படுவது என்பது தேர்வாளர்கள்.

தேர்வாளர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்

தேர்வு எழுதும் தேர்வாளர்கள் அதிகமான அழுத்தத்தில் இருப்பார்கள் சரியான நேரத்திற்குள் தேர்வை முடிக்க வேண்டும் குறிப்பாக கணிதம் போன்ற வினாக்களுக்கு சற்று சிந்தித்து விடை அளிக்க வேண்டும்.

இதனால் சரியான நேரத்திற்குள் முடிப்பதற்கு வேகமாக சிந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அவசரத்தில் சரியான விடை என்று தெரிந்தும் தவறான விடையை தேர்வு செய்து விடுவது மறுபடியும் அதை அடித்து விட்டு சரியான விடையை தேர்வு செய்தால் கூட இதற்கு முந்தைய தேர்வில் அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC பொருளாதார தேர்வில் வெற்றி பெறுவதற்கு முந்தைய வினாக்கள் விடைகள்..!

ஆனால் தற்போது அந்த முறை நீக்கப்பட்டுள்ளது நீங்கள் ஒரு வினாவிற்கு அந்த பாக்ஸில் டிக் செய்து விட்டால் அது தவறான இருந்தாலும் சரி சரியாக வினாவாக இருந்தாலும் சரி அவ்வளவுதான் மறுபடியும் அதில் நீங்கள் அடித்து எழுத கூடாது என கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் அவசரத்தில் தவறான வினாவை தேர்வு செய்து விட்டால் அவ்வளவுதான் உங்களுக்கு மதிப்பெண்கள் குறைந்துவிடும் எனவே நிதானமாகவும் சரியான தேர்வை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் சரியான விடையை இதில் தேர்வு செய்தால் மட்டுமே உங்களால் அரசு வேலை வாய்ப்பு பெற முடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment