TNPSC GROUP 4 தேர்வு வயது வரம்பு முழு விவரங்கள்..!TNPSC GROUP 4 Exam Age Limit Full Details

TNPSC GROUP 4 Exam Age Limit Full Details

TNPSC GROUP 4 தேர்வு வயது வரம்பு முழு விவரங்கள்..!

அரசு பணி பெறுவது இன்றைய காலகட்டங்களில் அவ்வளவு எளிதல்ல லட்சுக்கணக்கான இளைஞர்கள் அரசு பணிக்கு தயாராகிறார்கள் ஆனால் அவர்களின் அத்தனை நபர்களுக்கும் பணி கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.

குறிப்பிட்ட சதவீத இளைஞர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு தேர்வாகுகிறார்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் தற்போது அரசு பணிக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து முயற்சி செய்யக் கூடிய நபர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு குரூப்பிற்கும் பணியிடங்கள் மாறுபடுகிறது அந்த பணியிடங்களுக்கு தகுந்தார் போல் வயதுவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் இளைஞர்கள் வயது வரம்பு பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் நிச்சயம் உங்களால் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது நீங்கள் விரும்பிய பணியிடமும் கிடைக்காது அதனால் வயது வரம்பை பற்றி நன்றாக தெரிந்து கொண்டால்.

வேறு ஒரு பதவிக்கு கூட நீங்கள் தயாராகலாம் இந்த கட்டுரையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான பதிவிகளுக்கான வயது வரம்பு பற்றி முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Age Limit for TNPSC Group 4 Exam

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)

இந்தத் தேர்வை எழுதும் இளைஞர்கள் கிராம நிர்வாக பணியிடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால் வயது வரம்புகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

வகுப்பு குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
OC 21 30
BC 21 40
MBC 21 40
SC 21 40
ST 21 40

 

மற்ற வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு குரூப்-4 தேர்வு

வகுப்பு குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
OC 18 30
BC 18 32
MBC 18 32
SC 18 35
ST 18 35

 

குரூப் 4 தேர்வுக்கு கல்வி தகுதி என்பது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

சில முக்கியமான பகுதிகள் TNPSC பொது அறிவு அரசியல் அறிவியல் பாடத்திட்டம்..!

இந்த பதவி மாநில அரசால் வழங்கப்படுகிறது மத்திய அரசின் துறைகளில் பணிபுரிந்த நபர்கள் இந்த தேர்வின் மூலம் சலுகை மதிப்பெண்கள் மற்றும் மற்ற சலுகைகளை பெற முடியாது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment