TNPSC Group 4 Exam 2024 Question Paper Not Printed Correctly
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு சரியாக அச்சிடப்படாமல் இருந்த வினாத்தாள் இதற்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியுமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதிலும் நடைபெற்றது தமிழ்நாட்டில் அரசு பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்கின்ற டிஎன்பிஎஸ்சி.
பதவிக்கு ஏற்ப தேர்வுகள் மற்றும் நேர்முக தேர்வுகள் அல்லது சில நேரங்களில் ஆவணங்கள் சரிபார்க்கும் மூலம் நிரப்பி வருகிறது அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வு முதல் குரூப் 8 தேர்வு வரையில் அனைத்து தேர்வுகளுக்கும் இரண்டு மூன்று ஆண்டுகள் தயாரான நிலையில் தேர்வு எழுத வருகிறார்கள்.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது விண்ணப்பம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த தேர்வு மூலம் VAO, வனக்காவலர், பில்கலெக்டர், ஆய்வு அறிக்கை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், என மொத்தம் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும் அப்பொழுது காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தற்போது தேர்வு நடைபெற்ற சில மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாளில் வினாக்கள் சரியாக அச்சடிக்கப்படாமல் இருந்தது என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது அதற்கான புகைப்படமும் வெளிவருகிறது.
இதற்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க முடியுமா என்று தேர்வு எழுதிய நபர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்திடம் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
இந்த தேர்வு குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது, இந்த தேர்வில் முதன் முதலில் (Invalid Mark) முறை அறிமுகம் செய்யப்பட்டது இதுவும் தேர்வாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |