TNPSC Group 1 தேர்வு இன்று தமிழகத்தில் நடத்தப்பட்டது தேர்வு குறித்து வெளியான முக்கிய சில தகவல்கள்..!TNPSC Group 1 Exam was conducted today in TN Some information

TNPSC Group 1 Exam was conducted today in TN Some information

TNPSC Group 1 தேர்வு இன்று தமிழகத்தில் நடத்தப்பட்டது தேர்வு குறித்து வெளியான முக்கிய சில தகவல்கள்..!

தமிழகம் முழுவதிலும் இன்று GROUP-1 தேர்வு 797 மையங்களில் நடத்தப்பட்டது இந்த தேர்வில் 2.38 லட்சம் நபர்கள் கலந்து கொண்டார்கள் 90 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று Prelims எனப்படும் முதல் நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:30 மணிக்கு வரை நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள குடிமை பணியங்களுக்கான தேர்வு துணை ஆட்சியர் 16 இடங்களும்

துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) 23 காலிபணியிடங்களும்

வணிகவரித்துறை உதவி ஆணையர் 14 காலிபணியிடங்களும்

கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் 21 காலிபணியிடங்களும்

ஊராக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் 14 காலிபணியிடங்களும்

மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி 1 காலிப்பணியிடமும்

மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம்

என மொத்தம் 90 பணியிடங்களில் நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ஏப்ரல் 27ஆம் தேதி வரை தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த பணியிடத்திற்கு மொத்தம் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று இன்று முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் பொது அறிவியல் 175 கேள்விகளும், mathematics 25 கேள்விகளும், என 200 கேள்விகள் கேட்கப்பட்டது இதற்கு 300 மதிப்பெண்கள் ஆகும் இந்த தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.

புதுமைப்பெண் திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது

தற்போது இந்த தேர்வில் தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது என தேர்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இதற்கு எளிமையாக விடை அளித்து விடலாம் இதன்மூலம் 1.5 மதிப்பெண்கள் உறுதியாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார்கள்.

TNPSC தேர்வில் வேதியியல் அதிக மதிப்பெண்கள் வழங்கக்கூடிய பகுதிகள் பட்டியல்கள்..!

இந்த புதுமைப்பெண் திட்டம் என்பது தமிழக அரசின் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு.

மாதம் 1000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பாக அரசு பள்ளியில் பயின்று, அரசு கல்லூரியில் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில், சுயநிதி கல்லூரியில் தங்களது உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment