TNPSC and people of Tamil Nadu are in deep shock
TNPSC மற்றும் தமிழக மக்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்கள்..!
இந்த ஆண்டு முதல் TNPSC நிர்வாகம் கடுமையான அதிர்ச்சியில் உள்ளது இதற்கு முன்பு TNPSC நிர்வாகம் இப்படி திணறியது இல்லை டிஎன்பிஎஸ்சி தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டால் இதற்கு முன்பு குறிப்பிட்ட சதவித இளைஞர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வார்கள்.
இப்பவும் TNPSC மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டால் விண்ணப்பம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை திடீரென்று பல மடங்கு உயர்ந்து விட்டது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது தேர்வு ஜூன் 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இதற்கு 20 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள் ஆனால் தேர்வு எழுதியவர்கள் 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1 தேர்வு நடைபெற்றது வெறும் 90 பணியிடங்களுக்கு 2.70 லட்சம் நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
தற்போது டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது, இதற்கு காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2344 ஆனால் விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 7.90 லட்சம் நபர்கள்.
இப்படி குறைவான பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை பல லட்சமாக இருப்பதால் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது, இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பின்மை குறிக்கிறதா அல்லது தமிழக இளைஞர்கள் தனியார் துறைக்கு செல்லாமல் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கு முயற்சி செய்கிறார்களா என்பது உறுதி செய்யப்படாத தகவல்.
அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்கள்
ஆனால் இளைஞர்கள் அரசு வேலை என்றால் குறைவான சம்பளம் என்றாலும் இணைவதற்கு தயாராக இருக்கிறார்கள் இப்பொழுது இருக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு என்பது பாதுகாப்பாற்றதாக இருக்கிறது மற்றும் அதிக வேலை பளு, அதிக வேலை நேரம், விடுமுறை நாட்கள் இல்லை போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் அரசு வேலை வேலைவாய்ப்பிற்கு ஆசைப்படுகிறார்கள்.
முக்கியமாக அரசு வேலை வாய்ப்பு என்றால் சனி ஞாயிறு விடுமுறை மற்றும் மாதத்தில் பொதுது விடுமுறை இது போன்றவை வருவதால் மாதத்திற்கு குறைந்தது 20 முதல் 22 நாட்கள் வேலை செய்தால் போதும் ஆனால் தனியார் துறை அப்படி இல்லை மாதத்திற்கு 26 நாட்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
அரசு துறை என்பது ஒவ்வொரு மாதமும் சரியாக 1ம் தேதி சம்பளம் கிடைத்துவிடும், தனியார் துறை அப்படி இல்லை சம்பளம் சரியான தேதிக்கு வழங்கப்படும் இருந்தாலும் அதில் சில மாற்றங்கள் இருக்கிறது சம்பளத்தில்.
அரசு துறை ஒவ்வொரு வருடமும் சரியாக பணி உயர்வு, சம்பள உயர்வு இருக்கும், தனியா துறையில் அப்படி இல்லை அடுத்த வருடம் அதே நிறுவனத்தில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறி, இப்படி தனியார் துறை மீது நம்பிக்கை இல்லாமல் அரசுத்துறை நம்புவதால் இளைஞர்கள் பெரும்பாலும் அரசு வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |