TNPSC 2024 Group 4 Exam Candidates regarding Result Release Date
TNPSC 2024 குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பற்றி..!
தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் கீழ் தனியாக சுதந்திரமாக செயல்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை கணக்கிட்டு அதற்கான கல்வி தகுதி தேர்வு முறை போன்றவற்றை வகுத்து உள்ளது ஒவ்வொரு ஆண்டும் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தற்போது இந்த ஆண்டு குரூப்-1 குரூப்-2 குரூப்-4 மற்றும் குரூப்-3 போன்ற தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது இதில் குரூப் 1 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டது, செப்டம்பர் 14ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது, குரூப்-3 தேர்வு பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
TNPSC Group 4 தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி
இந்த மாதம் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்படலாம் என TNPSC வட்டாரங்கள் தெரிவிக்கிறது சரியான உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விடை தாள்களை திருத்தினால் கூட குறைந்தது 6 மாதம் தேவைப்படும்.
இங்கு 15.லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள் இப்பொழுது விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கினால் குறைந்தது ஆறு மாதம் கால அவகாசம் தேவைப்படும் என டிஎன்பிசி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
குறிப்பாக (OMR SHEET) கணினி முறையில் திருத்தும் பணி நடைபெறுகிறது மேலும் தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும், கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை வெளியிட வேண்டும், மற்றும் கட் ஆப் மதிப்பெண்களில் எந்த பிரிவினர்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு அதனடிப்படையில் வேலை வாய்ப்பு எப்படி வழங்கப்படுகிறது.
என்பதை பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட வேண்டும் இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என டிஎன்பிசி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |