TN school students how to apply aptitude test
பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு திறனாய்வு தேர்வு எப்போது, எப்படி விண்ணப்பிப்பது, எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்..!
தமிழகத்தில் 10வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு தற்போது 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது தமிழக அரசு மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
தற்போது தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதம் 1,000/- ரூபாய் முதல் 10 மாதங்களுக்கு 10 ஆயிரம் என்ற படி இளநிலை பட்டப்படிப்பு வரை தமிழக அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 500 மாணவர்கள் 500 மாணவிகள் என மொத்தம் 1000 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுடிய மாணவர்கள் வருகின்ற ஜூன் 11ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று தேர்வு கட்டணம் ரூபாய் 50 செலுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்குமாறு அதிகார பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்..!
இந்த முதலமைச்சர் திறனாய்வு தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட உள்ளது தமிழ்நாடு அரசின் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளின் அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள.
பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மாணவ மாணவிகள் https://dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE TELEGRAM CLICK HERE