தமிழக காவல்துறை 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கோர்ட்டில் மனு தாக்கல் காரசாரமாக நடந்த வாக்குவாதம்..!TN Police should pay Rs 1 crore compensation to Felix Gerald

TN Police should pay Rs 1 crore compensation to Felix Gerald

தமிழக காவல்துறை 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் கோர்ட்டில் மனு தாக்கல் காரசாரமாக நடந்த வாக்குவாதம்..!

தங்களை யாராவது எதிர்த்து பேசினால் அவர்கள் சங்கிகள் அவர்கள் பாஜக என முத்திரை குத்துவது திராவிட மாடல் அரசு சவுக்கு சங்கர் நடத்தி வந்த யூடியூப் சேனலில் பணிபுரிந்த நபர்களை மிரட்டி மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா உட்பட வழக்குகள் பதிவு செய்து சிறையில் தள்ளினார்கள்.

சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் இருவரும் ஒரு வீடியோவில் தமிழக பெண் காவல்துறையை பற்றி ஆபாசமாக பேசினார்கள் இது பற்றி காவல்துறையில் புகார் அளித்து திருச்சி காவல்துறை மற்றும் கோவை காவல்துறை.

சவுக்கு சங்கரை கைது செய்தது ஆனால் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதால் டெல்லியில் பத்திரிக்கையாளர் தலைவரை சந்தித்து இது பற்றி மனு கொடுக்கவும் பேசவும் சென்று இருந்தார்.

அப்போது தமிழக காவல்துறை டெல்லி சென்று ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெனரல் கைது செய்தது அதன் பிறகு திருச்சி நீதிமன்றம் கோவை நீதிமன்றம் என வழக்குகள் நடைபெற்று தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இதற்க்கு தான் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் வழக்கு தொடர்ந்து உள்ளார் அதாவது தன்னை கைது செய்யப்படும்போது உரிய ஆவணம் என்னிடம் வழங்கவில்லை மேலும் கைது செய்ததுடன் அருகில் இருக்கும் டெல்லியில் நீதிமன்றத்தில் என்னை ஆச்சப்படுத்தப்படவில்லை.

66 மணி நேரம் என்னை துன்புறுத்தியது காவல்துறை நான் கைது செய்யப்படும்போது அதைப் பற்றிய தகவலை என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பவில்லை ஒரு நபரை கைது செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய அடிப்படை நடைமுறைகளை காவல்துறை பின்பற்றவில்லை.

என்னை கொடுமைப்படுத்தினார்கள் மேலும் என்னுடைய youtube சேனல்களுக்கும் மிரட்டல் வந்திருக்கிறது இதற்கெல்லாம் நஷ்ட ஈடாக 1 கோடி தமிழக காவல்துறை வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் தமிழக காவல்துறையும் தாக்கல் செய்யுங்கள் என வழக்கு விசாரணையை நவம்பர் மாதத்தில் தள்ளி வைத்துள்ளார்கள்.

வாஸ்து குறிப்புகள் வீட்டிற்குள் செடிகளை வைப்பது காதல் உறவுகளை பலப்படுத்தும்..!

நிச்சயம் இது தமிழக திராவிட மாடல் அரசுக்கு பேரிடியாக விழும் ஏனென்றால் திராவிட மாடல் அரசு இதுவரை பதிவு செய்த வழக்குகளில் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது, இதிலும் தோல்வியை சந்தித்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment