மாணவர்களின் திறனை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் பல்வேறு துறைகளில் திறன் தேவையை மதிப்பீடு செய்து..!TN Govt joins Oracle to provide training 2 lakh students

TN Govt joins Oracle to provide training 2 lakh students

தமிழ்நாடு அரசும் ஆரக்கிள் நிறுவனமும் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரி மாணவர்களை தற்போது மாறிவரும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்பதயார் படுத்துவதற்கு.

இயந்திர கற்றல் (Machine Learning), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற துறைகளில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு தரமான பயிற்சி வழங்குவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் ஆரக்கிள் நிறுவனம் தற்போது புதிய கூட்டணியை அமைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த 2013 முதல் தமிழகத்தில் சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் தனியாக அமைப்பாக (TNSDC) இயங்கி வருகிறது திறன் மேம்பாட்டுக்கான மாநிலத்தின் தேடல் ஏஜென்சியாக தமிழ்நாடு அரசால் இது அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் திறனை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் பல்வேறு துறைகளில் திறன் தேவையை மதிப்பீடு செய்து தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுகளை தமிழகத்தில் உருவாக்கி வருகிறது.

தரமான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து அந்த நிறுவனத்துடன் கூட்டணி வைத்து பணியாற்றுகிறது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மாநில முழுவதும் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை வகுத்து சரியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகிறது.

இவை குறுகிய கால திறன் மேம்பாட்டு திட்டங்கள் முதல் நீண்ட கால பட்டைய படிப்புகள் வரை இதில் அடங்கும் பயிற்சி பலதரப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் வாழ்க்கையில் பயன் கொடுத்துள்ளது தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு என்பது அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்

நான் முதல்வன் என்பது தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டம் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களின் திறன் கணினி சார்ந்த அறிவு, எதிர்காலத்தில் மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அவர்களை தயார் படுத்துவதற்கு.

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவது இந்த நோக்கம் இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வரை பல்வேறு பிரிவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

TNPSC தேர்விலும் மதம் சம்பந்தமான அரசியலா திமுக அரசை கண்டிக்கும் இந்து முன்னணி அமைப்புகள்..!

தற்போது ஆரக்கிள் நிறுவனத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு புதிய கூட்டணியை ஏற்படுத்தி உள்ளது இந்த கூட்டணி மூலம் ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளவிய தரம் வாய்ந்த பொறியியல் மற்றும் நிதித்துறை சார்ந்த மனிதவள ஆற்றல் போன்றவை கிடைக்கும்.

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, மெஷின்லரிங், நிதித்துறை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களின் மாறுபாடு, குவாண்டம் கம்ப்யூட்டர், போன்றவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கும் அதில் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment