இனி போலியாக யாரும் உங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது பத்திரப்பதிவில் வந்துள்ள புதிய நடைமுறைகள்..!TN Govt Introduces Fingerprint Biometric During Deed Registration

TN Govt Introduces Fingerprint Biometric During Deed Registration

இனி போலியாக யாரும் உங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது பத்திரப்பதிவில் வந்துள்ள புதிய நடைமுறைகள்..!

பத்திர பதிவுத்துறையில் காலத்திற்கு ஏற்ற பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு கொண்டு வருகிறது தற்போது ஒரே நிமிடத்தில் பட்டா வழங்கும் முறை சோதனை அடிப்படையில் சில பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பத்திரப்பதிவு செய்யும் நிலத்திற்கு உட்பிரிவு இல்லை நிலம் முழுவதும் ஒரே நபரின் பெயரில் இருக்கிறது என்றால் அந்த நிலத்திற்கான பட்டா பத்திர பதிவின் போது ஒரே நிமிடத்தில் வழங்கப்படுகிறது தற்போது இதற்கான பணிகள் தமிழக முழுவதிலும் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

கூடிய விரைவில் ஒரே நிமிடத்திற்கான பட்டா முறை தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மேலும் உட்பிரிவுடன் கூடிய நிலமாக இருந்தாலும் 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

போலியான பத்திரப்பதிவை தடுக்கும் வகையிலும் ஒருவருடைய சொத்தை அவருக்கே தெரியாமல் விற்பனை செய்வதையும் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகிறது.

தற்போது பத்திரப்பதிவின் போது கைரேகை முறை அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது இதற்கு முன்பு பத்திர பதிவுத்து ஆதார் அட்டை மூலம் கைரேகை, கருவிழி சோதனை, போன்றவை இருந்தது இருந்தாலும் ஆன்மாறாட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது.

தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவும்போது விற்பனை செய்பவரும் வாங்குபவரும் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் அந்த கைரேகை ஆதார் அட்டை உடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே,பத்திரப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் யாருடைய சொத்தையும் போலியாக ஒரு நபர் விற்பனை செய்ய முடியாது.

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024 வகை வாரியாக..!

நிலம் விற்பனை செய்பவரின் கைரேகை ஆதார் அட்டையுடன் இதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யும்போது பதியப்பட்ட கைரேகை நிலம் வாங்குபவர் கைரேகை போன்றவை அனைத்தும் சரியாக பொருந்தினால் மட்டுமே பத்திரப்பதிவு ஏற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்காக 2.0 மென்பொருள்களில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் இந்த விரல் ரேகை பதிவு ஒப்பிடும் வசதியை சென்னையில் அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார்.

குறிப்பாக தென் சென்னை இணை-1 சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியானது கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பின் பிப்ரவரி 13ஆம் தேதிக்கு முந்தைய ஆவணங்கள் மட்டுமே பொருந்தும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment