TN Govt has changed the Partition Deed Loan Receipt Mortgage Deed
பத்திர பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறது,இதன் மூலம் பத்திரப்பதிவு எளிமையாக நடைபெற வேண்டும்..!
போலி பத்திர ஆவணங்கள் தடுக்கப்பட வேண்டும் மேலும் அரசு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசு காலகட்டத்திற்கு ஏற்ப பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக வழங்கி வருகிறது.
தற்போது புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதாவது பொது அதிகார ஆவண ரத்து, பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்வது குறித்து பத்திரப்பதிவுத்துறைக்கு புதிய உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பொது ஆவணங்களை பதிவு செய்யும்போது அது தொடர்பாக தடை ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை சார் பதிவாளர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் இது போன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது வேறு ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை ஏதும் உள்ளதா, என்பதையும் டிஐஜி அலுவலகம் மூலம் சரிபார்க்க வேண்டும் என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது.
தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தது
இதற்கு சம்பந்தமான சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து, தொலைபேசி வாயிலாக அழைப்பு, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது எனவே தான் இதனை முறைப்படுத்த இணையதளம் மூலம்.
பத்திரப்பதிவுக்கான ஸ்டார் 2.0 என்ற மென்பொருளில் உரிய வசதிகள் செய்யப்பட்டது எனினும் அதற்கு பிறகும் தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தது அதாவது பத்திரப்பதிவு மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.
வேறு ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தடை இல்லா ஆவணம் சான்று வாங்குவதற்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறது அப்படி சான்றுகள் வாங்கினாலும் சார் பதிவாளர் அலுவலக பத்திர பதிவு செய்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
என்று இப்படிப்பட்ட சூழலில் பத்திரப்பதிவு தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய உத்தரவு ஒன்றினை வழங்கியுள்ளார் அந்த உத்தரவில் 10 புதிய கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளது நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படும் ஆவண ஒப்படைப்பு கடன் முடிந்த பிறகு.
மேற்கொள்ளப்படும் ரத்து அடமானம் மற்றும் ரசீது பொது அதிகார ரத்து, குடும்ப நபர்களிடையே மேற்கொள்ளப்படும் பாகப்பிரிவினை பற்றிய தகவல்களின் போது இனிவரும் காலங்களில் (டிஐஜி) அலுவலகத்தில் இருந்து தடையில்லா ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது இவை தவிர பிற ஆவணங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும் இதற்கான சுற்று அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது
முன்னதாக கடந்த ஏப்ரல் 5ம் தேதி பத்திரப்பதிவு அதிகாரி சில உத்தரவுகளை புதிதாக வழங்கியிருந்தார் அதில் உரிய காரணம் இன்றி பத்திரங்களை நிலவையில் வைக்கும் சார் பதிவாளர் அலுவலர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை சார் பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் டிராப் ஹவுஸ் பாக்ஸ் (Drop House Box) என்ற பிரிவில் உரிய காரணத்தை சரியாக பதிவிட வேண்டும்.
மேலும் பத்திரம் நிலவில் வைக்கப்பட நிகழ்வில் அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் உரிய நபர்களிடமிருந்து பெற வேண்டும், நிலவையில் வைக்கப்படும் பத்திரங்கள் 15 நாட்களில்முடிக்கப்பட வேண்டும் என்பன 10 கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |