TN Govt does not provide anadheenam land patta
நிலம் வாங்கும் போதும் விற்பனை செய்யும் போதும் இதனை கருத்தில் கொள்ளுங்கள் இல்லை என்றால் உங்களுடைய நிலத்திற்கு பட்டா வழங்கப்பட மாட்டாது..!
நிலம் வாங்குவது அல்லது விற்பனை செய்வது பத்திரப்பதிவில் இருக்கக்கூடிய நடைமுறைகள் போன்றவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் கட்டாயம் இது உங்கள் வாழ்க்கையில் தேவை.
தற்போது பத்திரப்பதிவில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்கிறது அதேபோன்று தமிழகத்தில் உள்ள சில நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்குவதில்லை இது தெரியாமல் சில நபர்கள் நிலங்களை வாங்கிவிட்டு பத்திர பதிவு செய்துவிட்டு.
பட்டா கிடைக்காமல் அலைந்து வருகிறார்கள் சில நாட்களுக்கு பிறகு தெரிகிறது அவர்களுடைய நிலத்திற்கு தமிழக அரசு பட்டா வழங்கப்பட மாட்டாது அதன் பிறகு அவர்கள் நிலத்தை விற்பனை செய்தவரிடம் சென்று முறையிட்டாலும் எந்த பலனும் கிடைப்பதில்லை நீதிமன்றத்துக்கு சென்றாலும் அலைச்சல்கள் ஏற்படுகிறது.
எனவே நீங்கள் ஒரு நிலத்தை விற்பனை செய்கிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் எனில் அதன் தற்போதைய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டால் உங்களுடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும் உங்களுக்கு அலைச்சலும் ஏற்படாது.
அனாதீனம் நிலத்திற்கு தமிழக அரசு ஏன் பட்டா வழங்குவதில்லை
நீங்கள் ஒரு நிலம் வாங்குகிறீர்கள் எனில் முதலில் அந்த நிலத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அந்த நிலம் எந்த பஞ்சாயத்தில் அமைந்துள்ளது அந்த பஞ்சாயத்தில் இருக்கக்கூடிய கிராம நிர்வாக அலுவலராகத்திற்கு சென்று.
அந்த நிலத்தை பற்றி தெரிவித்து சில தகவல்களை கேட்க வேண்டும் அப்படி செய்தால் கிராம நிர்வாக அலுவலர் அந்த நிலம் என்ன என்பதை பற்றி முழுமையாக தெரிவித்து விடுவார் தமிழகத்தில் 1970களில் குறிப்பாக நகர் புறங்களில் சில நபர்கள் அரசு நிலத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட தமிழக அரசு 1978 ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தை அறிமுகம் செய்தது அதன் பிறகு அரசு நிலத்தை அபகரிப்பு செய்த நபர்களிடமிருந்து சுமார் 5883 ஏக்க நிலத்தை அரசு மீண்டும் கைப்பற்றியது ஆனால் இந்த நிலங்களை அரசு முறையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.
இதனால் மீண்டும் பழைய உரிமையாளர்கள் இந்த நிலங்களை 1999க்கு பிறகு சட்டம் ரத்து செய்யப்பட்டதால் விற்பனை செய்து விட்டார்கள் நகர்ப்புறங்களில் இதனை அறியாமல் வாங்கிய மக்கள் அதில் வணிக வளாகம், வீடு, கல்லூரிகள், பள்ளிகள், போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது இந்த நிலங்களை விற்பனை செய்தாலும் பத்திரப்பதிவு செய்தாலும் பட்டா மாறுதல் என்பது செய்ய முடிவதில்லை இதனால் இந்த நிலங்களை பயன்படுத்தி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற முடிவதில்லை.
நீங்கள் இது போன்ற நிலங்களுக்கு பட்டா வாங்க முடியுமா?
இந்த ஆணாதீன நிலத்திற்கு பட்டா வாங்க சில வழிவகை இருக்கிறது அதே நேரம் கிராமங்களில் விஏஓ அலுவலகம் சென்று இந்த நிலத்தை பற்றி தெரிந்து கொண்டு பட்டா வாங்க முடியும் ஆனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, போன்ற நகரங்களில் முக்கியமாக நகர்புற பகுதிகளில் இதனை அறிவது சற்று கடினம்.
அதற்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலமா என்பதை அறிந்து கொள்வதற்கு சர்வே நம்பரை கொண்டு தெரிந்து கொள்ளலாம் அப்படி வாங்கியவர்கள் தான் தற்போது சிரமப்படுகிறார்கள் (Land Ceiling Act) அலுவலகம் சென்று சோதித்து விட்டு சரியான முடிவு செய்யுங்கள் இதனால் உங்களுடைய அலைச்சல் பணம் போன்றவை பாதுகாக்கப்படும்.
அனாதீனம் நிலம் என்றால் என்ன?
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய நீர் நிலைகள், நீர்வழி பாதைகள், வாய்க்கால்கள், ஓடைகள், கோயில் நிலங்கள், வண்டிப்பாதை, அறநிலைக்கு சொந்தமான நிலங்கள், பள்ளிகள் கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இதுபோன்ற நிலங்கள் அனாதீனம் என்று அழைக்கப்படுகிறது.
சிறிது காலத்திற்கு முன்பு கூட கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது அப்படி பட்டா வாங்கியவர்களின் நிலைமையின் மதிப்பு தற்போது பூஜ்ஜியமாக வைத்துள்ளது தமிழக அரசு ஒரு நிலத்தை நீங்கள் வாங்குவதற்கு முன்பு அந்த நிலத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அந்த நிலத்திற்கான அடங்கல்.
வாங்கி முழுவதும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்துவிட்டு அதன் நிலத்தின் வில்லங்க சான்றிதழ் பெற்று நன்றாக சோதனை செய்துவிட்டு நீங்கள் நிலத்தை வாங்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |