TN Govt Announces Rs 1 Lakh Subsidy for Agricultural Professionals
தமிழக இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 1,00,000/- ரூபாய் மானியம் வழங்கும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது…!
தமிழகத்தில் நலிவடைந்து வரும் வேளாண்மை தொழிலை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வருகிறது இன்றைய இளைஞர்கள் (IT Job, Abroad Job, Trading, Private Jobs) போன்ற துறைகளில் அதிக ஆர்வம் செலுத்துவதால்.
விவசாயம் சார்ந்த தொழில் குறைய தொடங்கியது மேலும் விவசாயம் செய்தால் சரியான லாபம் இல்லை என்பது பரவலான இருக்கின்ற ஒரு செய்தி ஆனால் சரியான காலகட்டத்தில் சரியான பயிரை விவசாயம் செய்தால் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பது என்பது பலரும் தெரிவிக்கிறார்கள்.
தமிழக அரசும் தமிழகத்தில் வேளாண்மை செழித்து வளர்வதற்கு பல்வேறு செயல் திட்டங்களை செய்கிறது இப்போது இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு புதிதாக ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தில் 100 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1,00,000/- ரூபாய் மானியம் வழங்கப்படும் மேலும் 3% வட்டி மானியம் உடன் வங்கி கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை சார்ந்த தொழிலை பட்டதாரி இளைஞர்கள் தொடங்கினால் அவர்களுக்கு 100,000/- ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை உற்பத்தி துறை தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மானாவாரி பயிர்கள் உற்பத்தி ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தது ஆனால் இன்று அவற்றை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.
இதனால் போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் வேளாண்மை சார்ந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டிய சூழ்நிலை தமிழக அரசுக்கு இருக்கிறது, இளைஞர்களை ஊக்குவித்தால் நிச்சயம் வேளாண்மை சார்ந்த தொழில் வளர்ச்சி பெறும் என்பது வல்லுனர்களின் யோசனை.
இந்த ஆண்டில் 100 இளைஞர்களுக்கு வங்கிக் கடனுடன் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் 1,00,000/- ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
இது பற்றி அந்த துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் பட்டதாரி மட்டுமில்லாமல் எந்த பட்டதாரியாக இருந்தாலும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்டு இருந்தால் அவர்கள் மானியம் பெற தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க வேளாண் உள்கட்டமைப்பு விரிவான சரியான சட்டத்துக்கு உட்பட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் அதன்படி முறையாக விண்ணப்பித்த இளைஞர்களுக்கு வங்கிக் கடனிலிருந்து கடன் உதவி செய்து 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி
இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்ய முடிவு செய்தால் முதலில் உங்களுடைய வயது 21 முதல் 40 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும் விவசாயம் செய்யும் நபர் தான் விண்ணப்பிக்க முடியும்.
நீங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபராக இருந்தால் விண்ணப்பிக்க முடியாது,நீங்கள் முடிவு செய்தால் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதித்த கூடிய திட்டங்களின் அடிப்படையில் தொழிலை அமைத்துக் கொள்ள வேண்டும்.
செவ்வாய் ராசியில் சுக்கிரன் பிரகாசிக்கப் போகிறார் விரும்பிய வாழ்க்கை அமையும் ராசிக்காரர்கள்..!
குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே தேர்வு செய்யப்படுவார் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 10 மற்றும் 12-ம் கல்விச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆணையம்.
தொழில் குறித்த விவரங்கள் ஆகியவற்றை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் நீங்கள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக முழுவதும் தெரிந்து கொள்ள உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை நாடுங்கள் அவர்கள் அனைத்து விதமான உதவிகளையும் உங்களுக்கு செய்வார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |