TN Govt Announcement 2 Acres Land Patta Chitta Issue
உங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்தாலும் உங்களுக்கு பட்டா வழங்கப்படும் பத்திரப்பதிவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
பத்திரப்பதிவு பற்றி தினந்தோறும் புதிய தகவல்கள் வெளிவருகிறது போலியான நிலங்களை யாரும் பத்திரப்பதிவு செய்து விடக்கூடாது சில நபர்கள் நிலங்களை வாங்கி பத்திர பதிவு செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு அல்லது வெளி மாநிலங்களுக்கு.
பணி நிமிர்த்தமாக பல ஆண்டுகள் சென்று விடுவார்கள் அது போன்ற நபர்களின் நிலங்களை சில நபர்கள் நோட்டமிட்டு போலியாக பத்திர பதிவு செய்து விற்பனை செய்து விடுவார்கள் சில நபர்கள் விவசாயிகளை மிரட்டி அடிப்படையை வைத்து விவசாய நிலங்களை விற்பனை செய்வார்கள்.
போலி பட்டா சிட்டா அடங்கள் போன்றவை செய்யப்படுகிறது இதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை தற்போது ஏற்படுத்தி வருகிறது, முக்கியமாக போலி பத்திர பதிவுகளை கட்டாயம் தடுக்க வேண்டும் என புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது.
பட்டா சிட்டா என்றால் என்ன
பட்டா சிட்டா என்பது ஒரு நிலத்தின் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் நிலம் அமைந்துள்ளது, அதில் எந்த வட்டத்தில் எந்த பஞ்சாயத்தில் எந்த கிராமத்தில் எந்த பகுதியில் நிலத்தின் அளவு என்ன போன்ற அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருக்கும் மேலும் நிலத்திற்கு உரிமையாளர்கள் எத்தனை நபர்கள் தந்தை பெயர் உறவுகளின் பெயர் என அனைத்தும் இருக்கும்.
வில்லங்கச் சான்றிதழ்
வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு நிலத்தில் மறைமுகமாக மறைந்திருக்கும் வில்லங்கத்தை கண்டுபிடிக்கலாம் குறிப்பாக நீங்கள் வேறு ஒரு மாவட்டத்தில் நிலம் வாங்குவதற்கு விருப்பப்பட்டால் அந்த நிலத்தைப் பற்றிய சரியான தகவல் உங்களுக்கு வெளிவட்டாரங்களில் கிடைக்காது.
இதற்கு நீங்கள் எளிமையாக அந்த நிலத்தின் பட்டா எண் பயன்படுத்தி அந்த நிலத்தின் வில்லங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் நிலம் கடந்த இரண்டு 20 வருடங்களாக எத்தனை நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எத்தனை ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உரிமையாளர்கள் எத்தனை நபர்கள்.
அவர்களுடைய வாரிசு எத்தனை நபர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி இருக்கும் வில்லங்கச் சான்றிதழ் நீங்கள் ஒரு நிலத்தை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என்றால் முதலில் நிலத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மற்ற பணிகளை செய்யலாம்.
அடங்கல் என்றால் என்ன
அடங்கள் என்பது உங்களுடைய நிலத்தைப் பற்றி கிராம நிர்வாக அதிகாரியால் வழங்கப்படும் ஆவணம் உங்களுடைய நிலம் எந்த கிராமத்தில் அமைந்துள்ளது நிலத்தில் வீடு இருக்கிறதா அல்லது கிணறு இருக்கிறதா அல்லது போர்வெல் இருக்கிறதா நிலம் நன்செய், புன்செய், வறண்ட நிலமா,நீரோடை நிலமா, நிலத்தில் என்ன பயிர் செய்யப்படுகிறது, கடந்த ஆண்டு என்ன பயிர் செய்யப்பட்டது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது அடங்கல்.
பத்திரப்பதிவில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் என்ன
முன்பெல்லாம் நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா சிட்டா வழங்கப்படாது குறைந்தது ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் ஆனால் தற்போது நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது உட்பிரிவு இல்லாத நிலமாக இருந்து அதில் வில்லங்கம் எதுவும் இல்லை என்றால் பத்திரப்பதிவு செய்த உடனே தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்யப்படும் இதற்கான குறுஞ்செய்தி அடுத்த நாளே நிலம் விற்பனை செய்தவருக்கும் நிலம் வாங்கியவருக்கும் அனுப்பப்படும்.
TNPSC Group 2A தேர்வுக்கு நீங்கள் தயாராகினால் அதன் மூலம் Group 4 தேர்வில் வெற்றி பெற முடியுமா..!
போலியாக ஒருவருடைய நிலத்தை யாரும் பத்திர பதிவு செய்ய முடியாது நிலத்தை விற்பனை செய்பவரும் வாங்குவதும் கண் விழி, கைரேகை, ஆதார் அட்டை, போன்ற அனைத்து ஆவணங்களும் சரியாக பொருந்தினால் மட்டுமே நிலத்தை விற்பனை செய்ய முடியும் அல்லது வாங்க முடியும்.
உங்களிடம் 2 அல்லது 3 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை மனையாக பிரித்து விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது அப்படி விற்பனை செய்யப்படும் மனைகளுக்கும் உடனடியாக பட்டாக்கள், சர்வே எண், உட்பிரிவு எண், போன்றவைகள் அனைத்தும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |