பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம் இனி ஒரே நிமிடத்தில் பட்டா வழங்கப்படும்..!TN CM has ordered to issue the Patta in one minute

TN CM has ordered to issue the Patta in one minute

பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம் இனி ஒரே நிமிடத்தில் பட்டா வழங்கப்படும்..!

பத்திரப்பதிவுத்துறை தமிழக அரசருக்கு அதிக வருவாயை கொடுக்கும் துறைகளில் இதுவும் ஒன்று இந்த துறைகளில் பல்வேறு மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது குறிப்பாக இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யப்படுவது பட்டா வழங்குவது.

பட்டா பெயர் மாற்றம் செய்வது போன்றவை அனைத்தும் இணையதளமாக்கப்பட்டுள்ளது இதனால் பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பத்திரப்பதிவு முடிந்தவுடன் பட்டா வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என மக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் இனிவரும் காலங்களில் அது நடக்காது.

பத்திரப்பதிவு செய்தவுடன் கையோடு பட்டா வழங்கமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் மேலும் இணையதளம் மூலம் எங்கிருந்தாலும் பட்டாக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையில் ஒரு சில நபர்கள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர் பத்திரப்பதிவு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றேன் அங்கு 5,000/- ரூபாய் லஞ்சம் கேட்டார்கள்.

நான் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு வந்தேன் என்னிடம் பணம் இல்லை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கண்ணீரோடு வீடியோ வெளியிட்டார்,இந்த வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது செய்தித்தாள்களிலும் வெளிவந்தது.

அடுத்த நாளே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்,சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவரிடம் வாங்கப்பட்ட லஞ்சம் 5,000/- ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டது மேலும் அவருடைய கோரிக்கை என்னவென்று தீவிரமாக பரிசளிக்கப்பட்டு அடுத்த நாளே அதற்கு தீர்வு காணப்பட்டது.

இதற்கு பொதுமக்களிடம் நன்கு வரவேற்பு இருந்தது இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து புகார்கள் தொடர்ந்து அதிக அளவில் வந்தது இதேபோன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் குறைத்திருக்கும் கூட்டத்திலும் பத்திரப்பதிவு துறை இடத்தில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் மக்களிடம் லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு எளிமையாக நடைபெற வேண்டும் பட்ட உடனடியாக வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவிட்டார்.

முதல்வர் அறிவித்தலின்படி மூன்று திட்டங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது அதாவது தானியங்கி முறையில் பட்டா மாறுதல் தொடங்கியுள்ளது, அதேபோல் பொதுமக்கள் எங்கிருந்தாலும் இணையதளம் மூலம் தங்களுடைய நிலத்திற்கு பட்டா பெற்றுக்கொள்ள முடியும் எந்த அலுவலகத்திற்கும் சென்று காத்திருக்க வேண்டாம் என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களின் மீது வரிசைப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் யாருடைய சிபாரிகளின் படி உடனடியாக வழங்கும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரே நிமிடத்தில் பட்டா வழங்கப்படுகிறது

ஒரே நிமிடத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகள் 90% முடிந்து விட்டது இதற்காக சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது பட்டா வழங்குவது இரண்டு முறைகளில் வழங்கப்படுகிறது.

அதாவது உட்பிரிவு இல்லாத பத்திரப்பதிவு, உட்பிரிவு பத்திரப்பதிவு என இரண்டு முறை, ஒரு நபர் ஒரு சொத்தை பத்திரப்பதிவு செய்யும் பொழுது அதில் உட்பிரிவு இல்லை என்றால் அதில் வில்லங்கமும் இல்லை என்றால் ஒரே நிமிடத்தில் பட்டா வழங்கிய விடலாம் இது தானியங்கி முறையில் செயல்படுத்தலாம் என தற்போது ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இது வெற்றியும் பெற்றுள்ளது.

50 லட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கப்படுகிறது அதற்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது உடனடியாக சுய தொழில் தொடங்கலாம்..!

உட் பிரிவுடன் கூடிய பட்டாவிற்கு 30 நாட்களுக்குள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு பட்டா வழங்கலாம் என தற்போது கூறப்பட்டுள்ளது மேலும் எந்த ஒரு காரணங்களையும் தெரிவித்து மனுக்களை நிராகரிக்கக் கூடாது.

ஒருவேளை மனுக்களை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதற்கான சான்றிதழ்களை சார் பதிவாளர் அலுவலர்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment