Thol Thirumavalavan Palani worshiped at Murugan temple
பழனி முருகன் கோவிலில் திருமாவளவன் சாமி தரிசனம் மேலும் புலிப்பாணி ஆசிரமத்தில் மாலை அணிந்து கொண்டார்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பிரசித்தி பெற்றது இங்கு சாமி தரிசனம் செய்தார் விசிக தலைவர் திருமாவளவன் பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்கு சென்று வணங்கினார் திருமாவளவன்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இந்த கோவிலுக்கு கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள் மேலும் முருகனின் ஆறுபடை வீடுகளில் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.
திண்டுகள் என்றால் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது தமிழ் கடவுள் முருகன் என்று இந்த கோவில் மூலம் வர்ணிக்கப்படுகிறது அத்தகைய சிறப்புமிக்க பழனி முருகன் கோவிலில் சில நேரங்களில் நடிகர்கள் மறைமுகமாக சாமி தரிசனம் செய்வது உண்டு.
யோகி பாபு தங்க தேர் இழுத்து வழிபட்டார் இப்படி இருக்கும் சூழ்நிலைகளில் திடீரென்று விசிக தலைவர் திருமாவளவன் அங்கு சாமி வழிபாடு செய்தது கடும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் சில அரசியல் தலைவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
பழனி முருகன் கோவில் சாமி தரிசனம் செய்த வீசிக தலைவர் அவருடன் அவருடைய கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள் தொடர்ந்து முருகனை வழிபட்டார்.
தொல் திருமாவளவன் இதற்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது குறிப்பாக இந்து மதத்தைப் பற்றி கடும் விமர்சனம் செய்துள்ளார் இந்து மதத்தில் ஆபாசங்கள் அதிகமாக இருக்கிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் திடீரென்று பழனி முருகன் கோவிலில் அவர் சாமி வழிபாடு செய்தது கடுமையான விவாதங்களை இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளது தொல் திருமாவளவன் பெரியாரை மற்றும் அம்பேத்கரை பின்பற்றும் தலைவர்.
பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் கடவுள் மறுப்பு என்பதை ஏற்றுக் கொண்டவர் அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் பழனி முருகன் கோவிலில் அவர் வழிபாடு செய்ய வேண்டும் என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக அவருடைய சகோதரி உயிரிழந்து விட்டார் அப்போது பிராமணர்களை அழைத்து இந்து முறைப்படி சடங்குகளை செய்தார் அதுவும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
தொல் திருமாவளவன் திமுக உள்ளிட்ட சில நபர்கள் வெளியில் வேண்டுமானாலும் பெரியார் கொள்கை என்று பேசிக்கொள்ளலாம் ஆனால் அவர்களுடைய வீட்டில் இந்து மதத்தை முழுமையாக வழிபாடு செய்கிறார்கள்.
இந்து மதத்தின் வழிபாடு ஜோதிடம் மற்றும் ஜாதகம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுகிறார்கள் என்பது அவ்வப்போது தெளிவாக இது போன்ற நடைமுறைகளில் தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |