உங்களுடைய பரம்பரை சொத்தை பாகப்பிரிவினை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன..!The procedures to be followed while partitioning inherited property

The procedures to be followed while partitioning inherited property

உங்களுடைய பரம்பரை சொத்தை பாகப்பிரிவினை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன..!

உங்களுடைய பரம்பரை சொத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சரிசமமாக பாகப்பிரிவினை செய்யும் போது சில நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இல்லை என்றால் பத்திர பதிவு செல்லாது.

நம் நாட்டில் இன்னும் கிராமங்களில் சில குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்,இந்த கூட்டு குடும்பத்தில் பரம்பரை சொத்தை பிரிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருக்கிறது தற்போது சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் பங்கு உள்ளது.

என்ற சட்டம் நடைமுறையில் இருப்பதால் பிரச்சனைகள் பல மடங்கு அதிகரித்து உள்ளது பரம்பரை சொத்தை பாகப்பிரிவினை செய்து அனைவருக்கும் பத்திரப்பதிவு செய்வது என்பதை இன்றைய காலகட்டங்களில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

அது போன்ற சிக்கல்களை எப்படி தவிர்ப்பது பாகப்பிரிவினை செய்யும்போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

கவனமாக இருக்க வேண்டும் பாகப்பிரிவினை செய்யும் போது

உங்களுடைய தாத்தா பெயரில் சொத்து இருந்தால் உங்களுடைய தாத்தாவிற்கு எத்தனை வாரிசுகள் இருக்கிறார்களா அவர்கள் அனைவருக்கும் அந்த சொத்தில் பங்கு இருக்கிறது.

உங்களுடைய தாத்தாவிற்கு 6 குழந்தைகள் என்றால் அந்த 6 குழந்தைக்கும் சொத்தில் பங்கு உண்டு அந்த குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வெளியூரில் இருந்தாலும் அந்த சொத்தை பிரிக்கும்போது அவர்களுடைய கையொப்பம் கட்டாயம் தேவை.

ஒருவேளை அதில் ஏதாவது ஒரு குழந்தை இறந்து விட்டால் அவர்களுக்கு வாரிசு இருந்தால் நிச்சயம் அந்த வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு உள்ளது.

பாகப்பிரிவினை செய்யும் போது எவ்வளவு முத்திரைத்தாள் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாகப்பிரிவினை செய்யும் போது ஏன் வழக்குகள் வருகிறது

பாகப்பிரிவினை செய்யும் போது ஏன் வழக்குகள் வருகிறது என்றால் அனைவருக்கும் சரிசமமாக சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் ஒருவேளை சில நபர்களுக்கு சொத்தில் அதிக பங்கு சில நபர்களுக்கு குறைவான பங்கு இருந்தால்.

குறைவான பங்கு பெற்ற நபர் வழக்கு தொடுக்கலாம் என்று சட்டம் தெரிவிக்கிறது மேலும் சொத்தில் எனக்கு பங்கு வேண்டாம் என்று யாராவது தெரிவித்தால் அவர்கள் விடுதலை பத்திரமூலம் அதற்கான உடன்படிக்கையை எழுதிக் கொடுக்கலாம்.

அதன்பிறகு அவரால் நிச்சயம் சொத்தில் பங்கு கேட்க முடியாது பாகப்பிரிவினை குடும்ப உறுப்பினர்களுக்கும் அல்லது குடும்ப உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கலாம் குறிப்பாக உங்களுடைய தாத்தா உயிருடன் இருந்து அது அவர் சம்பாதித்த சொத்து என்றால்.

அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் குடும்ப உறுப்பினர் இல்லாத நபர்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்கலாம் உங்களுடைய தாத்தா உயிருடன் இல்லை சொத்து அவர் சம்பாதித்தது என்றால் உங்களுடைய அப்பா நினைத்தாலும் குடும்ப உறுப்பினர் இல்லாத நபர்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க முடியாது.

யார் அந்த சொத்தை சம்பாதித்தாரோ அந்த நபர் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே மூன்றாம் நபருக்கு சொத்தில் பங்கை கொடுக்க முடியும் பாகப்பிரிவினை செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணம் சொத்தின் மதிப்பின் அடிப்படையில் 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாயும், பதிவு கட்டணம் 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 4,000/- ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

பதிவு கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் அரசின் ஆணை என்ன

அவரவர் பாகப்பிரிவின் மதிப்பிற்கு 1 சதவீத ஸ்டாம் கட்டணம் 1 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது அதிலும் சலுகையாக ஸ்டாம் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம், பதிவு கட்டணம் மிக அதிகபட்சமாக ரூபாய் 4,000/- வசூலிக்கப்படுகிறது.

இது இந்திய முத்திரை சட்டத்தில் தமிழ்நாடு தீர்த்த சட்டத்தில் தற்போது நடைமுறையில் இருக்கிறது,ஒருவேளை குடும்ப உறுப்பினர் இல்லாத பட்சத்தில் மூன்றாம் நபர் என்றால் முத்திரை தீர்வு கட்டணம் 4 சதவீதம் அதாவது அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் மற்றும் பதிவு கட்டணம் 1 சதவீதம் கட்டாயம் அந்த மூன்றாம் நபர் செலுத்த வேண்டும்.

இந்து மதம் என்றால் இந்து மத சட்டத்தை பின்பற்றி பாகப்பிரிவினை செய்ய வேண்டும், முஸ்லிம் மதம் என்றால் முஸ்லிம் மதத்தின் சட்டத்தை பின்பற்றி பாகப்பிரிவினை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் பத்திரப்பதிவு செல்லும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment