The price of palm oil and pulses sold in the ration shop may increase
ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் பாமாயில் மற்றும் பருப்பின் விலை உயர்த்தப்படலாம்..!
அத்தியாவசிய பொருட்களின் விலை தமிழகத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பாக அரிசி 25 கிலோ ஒரு மூட்டை விலை தற்போது 1800 ரூபாயில் இருக்கிறது கடலை எண்ணெய் பருப்பு காய்கறிகள் போன்றவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
தற்போது வெளிப்புறத்தில் பாமாயில் பருப்பின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் தமிழக அரசு ஒரு வருடத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால்.
ரேசனில் விற்பனை செய்யப்படும் பருப்பு மற்றும் பாமாயில் விலையை உயர்த்த படலாம் என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வணிக கழக அதிகாரிகள் தகவல்களை கசியவிட்டுள்ளார்கள்.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை உயர்த்த விடலாம்
கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழக ரேஷன் கடையில் துவரம் பருப்பு ஒரு கிலோ 50 ரூபாய்க்கு பாமாயில் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது 2007 ஆம் ஆண்டு அப்போதைய காலகட்டத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனையானது.
பாமாயில் 45 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது 2024 ஆம் ஆண்டு துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது பாமாயிலும் 95 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இப்படி விற்பனை என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.
ரேஷன் கார்டில் பெயரை நீக்குவது எப்படி இரண்டு நிமிடங்களில் செய்துவிடலாம்..!
இருந்தாலும் தமிழக அரசு 17 ஆண்டுகளாக ரேஷனில் விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலையை உயர்த்தவில்லை, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு இதற்கான மானிய தொகை 1800 கோடி ரூபாய் இருந்தது ஆனால் 2024 ஆம் ஆண்டு இதற்கான மானிய தொகை தமிழக அரசுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்துவிட்டது.
இதனால் தமிழக அரசுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது இதனை ஈடுகட்ட தற்போது விலையை உயர்த்தலாமா என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |