The Governor congratulated Tamil Nadu on its formation day
அதிமுக, விஜய், சீமான், பாமக, உள்ளிட்ட கட்சிகள் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் மாலை ஆனதும் வழக்கம்போல் ஆளுநர் மிகப் பெரிய பிரச்சினையை தூண்டி விட்டார்.
இன்று தமிழ்நாடு நாள் என்று செய்தியை வெளியிட்டு திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி உள்ளார் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு உருவான நாள் என்று நவம்பர் 1ம் தேதி இருந்தது ஆனால் இந்த திமுக அரசு எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போலோதெல்லாம் அவங்களுக்கு பிடித்தமான நாட்களை மாற்றி விடுவார்கள்.
இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் புத்தாண்டு தை 1ம் நாள் என்று மாற்றி அமைத்தார் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வீரப் பெண்மணி செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் சித்திரை ஒன்று தான் தமிழ்நாட்டின் புத்தாண்டு நாள் என அறிவித்தார்.
கருணாநிதி அறிவித்தது படுதோல்வியில் முடிந்தது இப்பொழுது சித்திரை திருநாளுக்கு திருட முன்னேற்றக் கழகத்திலிருந்து வாழ்த்துக்கள் வருவதில்லை. ஏனென்றால் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சித்திரை ஒன்று தான் புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள்.
இப்பொழுது திமுக இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது ஆளுநர் நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து பொதுக்கூட்டங்களும் வாழ்த்துக்களும் தொடர்ந்து வெளி வருகிறது ஏனென்றால் தமிழ்நாடு உருவான நாள் என்று இது கடுமையான எரிச்சலை திமுகவிற்கு தற்போது ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தை ஒட்டி நமது தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு தனது வளமான ஆன்மீகம் கலாச்சாரம் இலக்கியம் பாரம்பரியம் கொண்ட நாட்டின் சிந்தனை மற்றும் அடையாளத்தை மகத்தான முறையில் வடிவமைத்துள்ளது.
இந்த புனித பூமியின் முனிவர்கள், ஞானம் தேடுவோர், கவிஞர்கள் மற்றும் வீரமிக்க ஆட்சியாளர்கள் எல்லா காலங்களிலும் பாரதத்தின் ஆன்மாவை வளப்படுத்தி அதன் அன்பு மற்றும் உலக அளவில் சகோதரத்துவத்தின் செய்தியை கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்த மண்ணின் எண்ணற்ற தேசத்தை சுதந்திரப் போராட்ட வீரர்கள் அசைக்க முடியாத உறுதி மற்றும் அவர்களின் வீரமும் தியாகமும் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு துடிப்பான ஜனநாயகத்திற்கு வழி வகுத்துள்ளன.
இந்த நாளில் 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்கு உழைப்பதற்கு நமது ஈடுபாட்டை கொடுப்போம் என தெரிவித்துள்ளார் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1ம் தேதியை தத்தம் மாநிலம் உருவான ஜனமாக கொண்டாடி வருகிறது கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்கள்.
தளபதிக்கு அடுத்து சிவகார்த்திகேயன் ?அமரன் முதல் நாளில் 21 கோடி வசூல் 100 கோடி தாமதமாகுமா..!
சென்னை மாநகரம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் 1968ல் ஜூலை 18-ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் அதன்படி ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி இந்த திராவிட மாடல் அரசு ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இவர்கள் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள் மற்றவர்கள் யாருமே கொண்டாடுவதில்லை எனினும் திமுக மற்றும் அதன் கூட்டணி தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு உருவான நாள் என்று கொண்டாடி வருகிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |