நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து விலகி வரும் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் என்ன நடக்கிறது அந்த கட்சிக்குள்..!The District Secretary is resigning from the NTK party

The District Secretary is resigning from the NTK party

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து விலகி வரும் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் என்ன நடக்கிறது அந்த கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் விலகி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி உள்ளார்கள் நேற்று சேலம் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகி விலகிய நிலையில் இன்று அதே மாவட்டத்தில் மற்றொரு முக்கிய நிர்வாகி விளக்கியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் அந்தக் கட்சியிலிருந்து நேற்று விலகுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வைரம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி உள்ளதால் இந்த கட்சியில் என்ன நடக்கிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது தற்போது விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளதால்.

அவருடைய மாநாட்டிற்கு இரண்டு லட்சத்திற்கு அதிகமான இளைஞர்கள் ஒன்று இணைந்ததால் அங்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது ஆனால் கட்சி தொடங்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.

கட்சியை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும் என்பது அவ்வளவு எளிதல்ல சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார் இதுவரை தேர்தல் களத்தில் நின்று வருகிறார் தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வியுற்றாலும்.

8 சதவீதத்திற்கு மேல் வாக்கு சதவீதம் பெற்று மாநில அந்தஸ்து பெற்றுவிட்டார் நடிகர் விஜய் இப்பொழுது தான் கட்சி தொடங்கியுள்ளார் கடந்த 2005 ஆம் ஆண்டு மதுரையில் விஜயகாந்த் தொடங்கிய மாநாடு என்பது மிகப்பெரியது.

25 லட்சம் நபர்கள் ஒன்றிணைந்தார்கள் 200 ஏக்கரில் மாநாடு நடத்தப்பட்டது நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல ஆனால் ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களை சந்தித்து விட்டு அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டு பல நடிகர்களை நாம் முன்னிலைப்படுத்தலாம் ஆந்திராவில் சிரஞ்சீவி மிகப்பெரிய பட்டாளத்தை வைத்தார் தற்போது அவர் அரசியலில் இருக்கும் இடம் இல்லாமல் சென்று விட்டார் ஒரு தேர்தலை சந்திக்க குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

ஆனால் அது போன்ற மிகப்பெரிய தொகை தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளிடம் மட்டுமே உள்ளது மேலும் தமிழகத்தில் உள்ள 70 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று பணி செய்ய குறைந்தபட்சம் 50 நபர்கள் தேவை.

பொதுத்துறை நிறுவனமான BSNL இன் ரீசார்ஜ் திட்டங்கள்..!

அதுபோன்ற வலுவான கட்டமைப்பு அதிமுக திமுக விட மட்டுமே உள்ளது மற்ற கட்சிகளிடம் இல்லை விஜய் போன்ற புதிய நபர்கள் கட்சி தொடங்கினால் வாக்குச்சாவடி தேர்தல் நடக்கும் அன்று எளிமையாக பணத்தை கொடுத்து.

இந்த இரண்டு கட்சிகளும் விலைக்கு வாங்கி விடுவார்கள் இரண்டு கட்சிகளை இதுவரை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் விஜய் தேர்தலில் தனித்து நின்றால் அவருடைய அரசியல் எதிர்காலம் பூஜ்ஜியம் மற்றும் அவருடைய சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment