13 வயது பள்ளி மாணவியை NCC பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..!Teacher who sexually assaulted a 13 year old schoolgirl in Krishnagiri

Teacher who sexually assaulted a 13 year old schoolgirl in Krishnagiri

13 வயது பள்ளி மாணவியை NCC பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை NCC முகாம் பள்ளியில் நடைபெற்றுள்ளது அப்பொழுது அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளார்கள்.

அதிகாலையில் மாணவி ஒருவரை NCC பயிற்சியாளர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று தன்னுடைய அருகில் அமர வேண்டும் என தெரிவித்துள்ளார் அச்சத்தில் உறைந்து போன.

அந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இது குறித்து வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி பள்ளி தாளாளர் அவரிடம் முறையிட்டுள்ளார்.

உடனடியாக பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இரண்டு நபர்களும் இது குறித்து வெளியில் தெரிவித்தால் உன்னுடைய வாழ்க்கை பாழாகிவிடும் எனவே அமைதியாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.

வீட்டுக்கு சென்ற மாணவி சோர்வாக இருந்துள்ளார் இதனை கண்ட பெற்றோர் மாணவியை விசாரித்துள்ளார்கள் மாணவி நடந்த விஷயத்தை சொல்லி உள்ளார் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்கள்.

அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

தற்போது பள்ளி முதல்வர் சதீஷ்குமார் தாளாளர் சாம்சங் உள்ளிட்ட 9 நபர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளார்கள் வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமன் தலை மறைவாகிவிட்ட நிலையில்.

பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார்,தாளாளர் சாம்சங் ஆசிரியர்கள் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள் இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான சிவராமன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் முக்கிய குற்றவாளி சிவராமன் கோவையில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்ற தனிப்படை சிவராமனை சுற்றி வளைத்து கைது செய்தார்கள்.

சமீபத்திய திட்டங்களில், ரூ.666 ரீசார்ஜ் திட்டம் மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாகும்..!

அப்போது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் தப்பிக்க முயற்சி செய்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி இருப்பதாகவும் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்கள் இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் சிவராமன் செல்போனில் இருந்த வீடியோக்கள் புகைப்படங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக.

காவல்துறை தெரிவித்துள்ளார்கள் இதற்காக சைபர் கிரைம் காவல்துறையை உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் நாளுக்கு நாள் சிவராமனின் பாலியல் லீலைகள் தொடர்பாக பல அதிர வைக்கும் தகவல்கள் தற்போது வெளியில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment