தமிழ்ப் புதல்வன் 1000 திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது..!Tamil puthalvan 1000 scheme start August month this year

Tamil puthalvan 1000 scheme start August month this year

தமிழ்ப் புதல்வன் 1000 திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது..!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் அரசு கல்லூரியில் மேற்படிப்புக்கு சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் மேலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்கும் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நான் முதல்வன் திட்ட மூலம் ORACAL என்கின்ற பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து மாணவர்களின் கணினி சார்ந்த திறனை அதிகரிப்பதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது,இந்த ஆண்டு 2 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்

திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார் தற்போது அது போலவே கல்லூரி மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

பான் கார்டு விண்ணப்பித்த பிறகு தபால் மூலம் உங்களுடைய முகவரிக்கு வரவில்லையா என்ன செய்ய வேண்டும்..!

அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது மாணவர்களுக்கும் இதே போன்ற ஒரு திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்த திட்டத்தின் பெயர் தமிழ் புதல்வன்.

12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து, அரசு கலைக்கல்லூரியில் அல்லது அரசு உதவி பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment