Tamil Nadu Ration Shops will provide all the items in June 2024
ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..!
கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசாங்கத்தால் புதிய திட்டங்களை கொண்டு வர முடியவில்லை திட்டங்களில் பல்வேறு மாற்றங்களையும் செய்ய முடியவில்லை.
இதனால் மே மாத்தில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மக்களின் அன்றாட தேவைகளாக இருக்கும் அரிசி, பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, போன்றவை ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது திடீரென்று இந்தப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள்.
மேலும் இது பற்றிய புகார்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது எதிர்க்கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்கள் சமூக வலைத்தளங்களில் விரைவில் ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை
இரண்டு மாதங்களாக தேர்தல் நடைமுறை நாடு முழுவதும் அமலில் இருந்ததால் பொருட்கள் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது தற்போது தேர்தல் நடைமுறை விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது ஜூன் மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மே மாதத்தில் அரிசி, பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் வழங்காத ரேஷன் கார்டுகளுக்கு ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |