தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடக்கம்..!Tamil Nadu government sells 15 grocery items in ration shops

Tamil Nadu government sells 15 grocery items in ration shops

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடக்கம்..!

தீபாவளி பண்டிகை இந்த மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது தற்போது தமிழக ரேஷன் கடையில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இந்த தீபாவளி பண்டிகைக்கு குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதே போன்ற திட்டத்தை கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

அப்பொழுது வழங்கிய பொருட்கள் அனைத்தும் தரமானவை இல்லை என்பதை மக்கள் சமூக வலைத்தளங்களில் தெரியப்படுத்தினார்கள் இதற்கு முன்பு திமுக அரசு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கிய மல்லிகைப் பொருட்களும் தரமானவை இல்லை என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

தற்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்படும் பொருட்கள் 499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது இதை தமிழக அரசின் அமுதம் அங்காடி அமுதம் ரேஷன் கடைகளில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

கடுகு + உளுத்தம் பருப்பு – 125 கிராம்

சீரகம் – 100 கிராம்

வெந்தயம் – 100 கிராம்

சோம்பு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

மிளகாய் – 250 கிராம்

தானிய – 500 கிராம்

மஞ்சள் தூள் – 50 கிராம்

புளி – 500 கிராம்

உப்பு – 1 கிலோ

உளுத்தம் பருப்பு – 500 கிராம்

கடலை பருப்பு – 200 கிராம்

பாசிப்பருப்பு – 200 கிராம்

வறுக கடலை – 200 கிராம்

பெருங்காயத்தூள் – 15 கிராம்

டானா புயல் எப்போது எங்கே கரையை கடக்கும்..!

இந்த 15 பொருட்களின் விலை வெளிச்சந்தையில் இன்றைக்கு 3,840/- என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது இதனை மானிய விலையில் ஏழை எளிய பொருட்களுக்கு நியாய விலை கடைகளில் 499/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment