Study these Syllabuses carefully to crack TNPSC Group 4 Exam
TNPSC Group-4 தேர்வில் வெற்றி பெற இந்த பாடத்திட்டங்களை நன்றாக படித்துக் கொள்ளுங்கள்..!
TNPSC Group 4 exam தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து அதிகப்படியான விண்ணப்பங்கள் வருகிறது இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் தேர்வில் 20 லட்சத்திற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.
ஆனால் 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் தேர்வு எழுதினார்கள் இதற்கான கல்வி தகுதி குறைந்தபட்சம் 10ம் வகுப்பு என்பதால் விண்ணப்பம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் அனைவரும் வெற்றி பெற முடிவதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
ஏனென்றால் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து இந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் தேர்வு எளிமையாக இருந்தாலும் கட் ஆப் மதிப்பெண்களில் 170 க்கு மேல் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஆனால் அப்பொழுதும் வேலை கிடைப்பது கடினம் ஏனென்றால் தேர்வின் மதிப்பெண்களை வைத்து மட்டும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், இப்படி பல்வேறு அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பிரிக்கப்படுகிறது நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு.
அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவதற்கு சில பாடத்திட்டங்களை நன்றாக படிக்க வேண்டும் அந்த பாடத்திட்டங்களில் இருந்து தான் அதிகமான வினாக்கள் கேட்கப்படுகிறது.
நீங்கள் இந்த தேர்வுக்கு தயாராகுகிறீர்கள் எனில் உங்களுடைய நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களை படித்தால் மட்டும் போது என்று பல்வேறு தகவல்களை வழங்கி இருப்பார்கள்.
ஆனால் அவை முற்றிலும் தவறு 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களை நீங்கள் நன்றாக படித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் எளிமையான சில வினாக்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 5A தேர்வு என்றால் என்ன மற்றும் இந்த தேர்வுக்கான தகுதி என்ன..!
நீங்கள் மிகவும் எதிர்பார்த்த வினாக்கள் சில நேரங்களில் கேட்கப்படுவதில்லை குறிப்பாக 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் நீங்கள் நன்றாக தயார் செய்திருப்பீர்கள் ஆனால் எளிமையான ஒரு வினா 3ம் வகுப்பிலிருந்து கூட கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் நீங்கள் நன்றாக படித்துக் கொண்டால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இயற்பியல்
வேதியல்
தாவரவியல்
விலங்கியல்
சுற்றுச்சூழல்
உலக புவியியல்
இந்திய புவியியல்
தமிழ்நாடு புவியியல்
இந்திய வரலாறு
அரசியல் அறிவியல்
பொருளாதார
இந்திய தேசிய இயக்கம்
போன்றவற்றின் பாடத்திட்டங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |