TNPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழகத்தின் முக்கியமான சில தகவல்கள்..!Some important information of TN to succeed in TNPSC exam

Some important information of TN to succeed in TNPSC exam

TNPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழகத்தின் முக்கியமான சில தகவல்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தமிழகத்தின் அடிப்படை சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் இதற்கு தினந்தோறும் செய்தித்தாள்களை படித்து வந்தால் போதும்.

TNPSC தேர்வு குரூப்-1 முதல் குரூப்-8 வரை பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் குரூப்-1 முதல் குரூப்-4 வரை உள்ள தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் முக்கியமாக குரூப்-4 தேர்வுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்விற்கு குறைந்தபட்சம் 20 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள்.

குறைந்தபட்சம் 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள் தற்போது இந்த ஆண்டு குரூப் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது, நீங்கள் நன்றாக தயாராக இருந்தால் நிச்சயம் இதன் மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

தேர்வில் வெற்றி பெறுவது எளிது ஆனால் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் இந்த கட்டுரையில் தமிழகத்தின் அடிப்படை தகவல்களைப் பற்றி சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மாநில நிர்வாக பிரிவுகள்

தமிழ்நாடு நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது (2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடிப்படையில்).

நிர்வாக பிரிவுகள் 2020 ஆம் ஆண்டு

மாவட்டங்களின் எண்ணிக்கை – 38

வருவாய் கோட்டங்கள் எண்ணிக்கை – 87

தாலுகாக்கள் எண்ணிக்கை – 311

பீர்காக்கள் எண்ணிக்கை – 1349

வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை – 17,680

மாநகராட்சிகளின் எண்ணிக்கை – 21

நகராட்சிகளின் எண்ணிக்கை என்ன – 138

ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை – 385

பேரூராட்சிகளின் எண்ணிக்கை – 490

கிராம ஊராட்சிகள் எண்ணிக்கை – 12,618

மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை – 39

சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை – 234

மாநில மொழி – தமிழ்

தமிழக அரசின் சின்னம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 1949 ஆம் ஆண்டு முதல்

TNPSC குரூப் 4 VAO தேர்வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற..!

மாநில பாடல் – தமிழ்த்தாய் வாழ்த்து நீராரும் கடல் எடுத்து

மாநில பறவை – மரகத புறா

மாநில விலங்கு – நீலகிரி வரையாடு

மாநில விளையாட்டு – கபடி போட்டி

மாநில மலர் – செங்காந்தள் மலர்

மாநில மரம் – பனைமரம்

மாநில பூச்சி – தமிழ் மறவன் பட்டாம்பூச்சி

மாநில நடனம் – பரதநாட்டியம்

மாநில நதி – காவேரி

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment