மின் கட்டண உயர்வுக்கு பிறகு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுமா புதிய மின் கட்டணம் உங்கள் வீட்டுக்கு எவ்வளவு வரும்..!Some important information about TN govt electricity tariff hike

Some important information about TN govt electricity tariff hike

மின் கட்டண உயர்வுக்கு பிறகு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுமா புதிய மின் கட்டணம் உங்கள் வீட்டுக்கு எவ்வளவு வரும்..!

தற்போது தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் இனி வழங்கப்படுமா என்று மக்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது அது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது, எவ்வளவு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய மின்சார கட்டணம் எவ்வளவு வரும், என்பதை பற்றிய முழுமையான தகவல்களை இந்த கட்டுரைகளுக்கானலாம்.

புதிய மின்சார கட்டணம் குறித்து சில தகவல்கள்

தமிழகத்தில் தற்போது 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர் பயன்பாட்டில் இருக்கிறது, இவர்களில் 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்சார கட்டண உயர்வு எதுவும் இல்லை அதாவது இவர்கள் 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மானியத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குடிசை, விசைத்தறி, வழிபாட்டு தலம், விவசாயம், கைத்தறி, தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மானியத்தில் எந்த மாற்றங்களும் இல்லை.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரம் ரீடிங் செய்யப்படுகிறது தமிழகத்தில், அதன்படி பார்த்தால் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 5 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக புதிய மின் கட்டணம் உயரும்.

300 யூனிட்கள் வரை பயன்படுத்தப்படும் மின் நுகர்வு குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 15 ரூபாய் உயரும்.

400 யூனிட்கள் வரை பயன்படுத்தப்படும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 25 ரூபாய் மட்டுமே உயரும்.

இனி தடையின்றி தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும்..!

500 யூனிட்கள் வரை பயன்படுத்தப்படும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 40 ரூபாய் மட்டுமே உயரும்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 2.10 லட்சம் சிறு குரு மின் நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட் இருக்கு 20 காசுகள் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment