Simple Tips to Get Higher Marks in TNPSC Maths
TNPSC கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற எளிய குறிப்புகள்..!
போட்டித் தேர்வு என்றால் அனைத்து படப்பகுதிகளிலும் எளிமையாக விடை அளித்து விடலாம், சில நபர்களுக்கு கணக்கு பாடப் பகுதி என்றால் சற்று தடுமாற்றம் அச்சம் ஏற்படுகிறது, அது போன்ற நபர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் சில நேரங்களில் வேலை வாய்ப்பு பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது.
குறிப்பாக 2 மார்க் அல்லது 3 மார்க் வித்யாசத்தில் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் இருக்கிறார்கள் இது போன்ற நபர்கள் கணக்குப் பகுதியில் சரியாக விடை அளிக்காமல் இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
25 கேள்விகள் கேட்கப்படுகிறது அதற்கு குறைந்தது 20 கேள்விகளுக்கு சரியாக விடை அளித்தால் நிச்சயம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, தற்போது இந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 25 கேள்விகளுக்கு பதிலாக கணக்கு பகுதியில் 29 கேள்விகள் கேட்கப்பட்டது.
இது தேர்வாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது கணக்கு பகுதியில் நன்றாக படிக்கும் நபர்கள் 29க்கு 29 எளிமையாக பெற்று விடுவார்கள் ஆனால் சில நபர்களால் அவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
கணக்குப்பகுதியில் நீங்கள்
29க்கு 28 மதிப்பெண்கள் பெற்றால் மிக நன்று
29 இருக்கு நீங்கள் 26 எடுத்தால் நன்று
29 நீங்கள் 20 எடுத்தால் சுமார்
29 அதற்கு நீங்கள் 15 எடுத்தால் மிக மோசம்
கணக்குப் பகுதியில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முதலில் நீங்கள் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும் உங்களுக்கு கணிதம் வராது என்று நீங்கள் நினைக்க கூடாது அதை பற்றி மற்றவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது எனக்கு கணிதம் வருகிறது நான் நல்ல மதிப்பெண் பெறுகிறேன் என்று நேர்மறையாக தன்னம்பிக்கையாக சிந்தித்துப் பழகுங்கள்.
முந்தைய வினா விடைகளை நன்றாக கவனியுங்கள்
நீங்கள் 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடைபெற்ற தேர்வுகளின் (Question Papers) நன்றாக கவனித்து வாருங்கள் கணக்குப் பகுதியில் எப்படி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்த (Question Papers) நன்றாக கவனித்து வந்தால் நிச்சயம் அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று மார்க் கேள்விகள் கேட்கப்படும்.
நீங்கள் இந்தப் பகுதியில் எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம் இங்கு உழைப்பு என்பது இந்த பகுதியில் குறைவு முக்கியமாக சில formulas நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.
தேர்வு நேரங்களில் கேள்விகளை நன்றாக புரிந்து கொண்டு சிந்தித்து விடை அளித்தால் நிச்சயம் அனைத்து கேள்விகளுக்கும் எளிமையாக விடை அளித்து முழு மதிப்பெண்களை பெற்று விடலாம்.
இயற்பியல், வேதியல், தமிழ், ஆங்கிலம், திறனறிவு, தாவரவியல், விலங்கியல், நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் நீங்கள் நன்றாக செயல்பட்டு கணக்குப்பகுதியில் குறைந்தது இரண்டு மதிப்பெண்கள் குறைந்தாலும் உங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
Typing தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC குரூப் 4 வேலை கிடைக்குமா..!
தற்போது இந்த ஆண்டு கேட்கப்பட்டுள்ள 29 கேள்விகளில் உங்களுக்கு 20 மதிப்பெண்கள் தான் கிடைக்கிறது என்றால் வேலைவாய்ப்பில் சற்று பின்தங்கி விடுவீர்கள், 29 கேள்விகளில் உங்களால் சரியாக 25 கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தால் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள்.
சரியான வழிகாட்டி, முந்தைய கேள்வி தாள்கள், மாநில அளவில் நடைபெறுகின்ற மாதிரி தேர்வுகள், போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே உங்களால் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் தொடர்ந்து தினம்தோறும் இதற்கான பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |