Senthil Balaji must be produced in court today the judge said strictly
செந்தில் பாலாஜி இன்று ஆஜர் படுத்தப்பட வேண்டும் இல்லையெனில் காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் கண்டிப்புடன் தெரிவித்த நீதிபதி..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதற்கு 67 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என்பது அமலாக்க துறையின் குற்றச்சாட்டு அதற்கான அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை ஆதாரத்துடன் வைத்திருக்கிறது.
இவர் உத்தமர் என்று இன்று திமுக தெரிவிக்கிறது இந்த வழக்கை தொடுத்தது திமுக என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது உடன்பிறப்புகள் செந்தில் பாலாஜிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் பல நபர்கள் இவரிடம் பணம் கொடுத்துவிட்டு நடுத்தெருவில் இருக்கிறார்கள்.
மூன்று லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது பல நபர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சில நபர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது.
இப்படிப்பட்ட மனிதருக்கு எத்தனை நபர்கள் ஆதாரமாக இருக்கிறார்கள் எங்கு பார்த்தாலும் ஊழல் இவர் எந்த துறைக்கு சென்றாலும் ஊழல் இவருடைய ஊழல் பற்றி தெரிந்து தெரிந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அமைச்சர் பதவி விட்டு 35 நிமிடங்களில் நீக்கி விட்டார்.
ஆனால் திராவிட மாடல் அரசுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது அதுவும் ஜாமீன் கிடைப்பதற்கு தான் அமைச்சர் பதவியை இவர் ராஜினாமா செய்தார் இப்பொழுது ஊருடைய வழக்குகள் சென்னை முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்
இவருடைய வங்கி கணக்கில் பான் கார்டு விவரங்கள் இல்லாமல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது என அமலாக்கத்துறை தெரிவிக்கிறது அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் என்னுடைய சம்பளம் என்று தெரிவித்தார்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்ட நீதிபதிகள்.
நீதிபதிகளை விடவா எம்எல்ஏவுக்கு சம்பள அதிகம் எனக் கேள்வி எழுப்பினார்கள் அப்படி உங்களுக்கு சம்பளம் மாதத்திற்கு ஒரு லட்சம் என்றாலும் 12 மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் தானே எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்கள் வங்கியில் பண பரிவர்த்தனை நடைபெற்றது என் கேள்வி எழுப்பினார்கள்.
மறுபடியும் விவசாயம் மூலம் எங்களுக்கு பணம் கிடைத்தது என்று தெரிவித்தார்கள் இவ்வளவு பணம் கிடைக்கிறது என்றால் நாட்டில் ஏன் விவசாயிகள் உயிரிழக்கிறார்கள் அந்த பணத்திற்கு வருமான வரி கணக்கு எங்கே என இப்படி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
சென்னை முதன்மை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டது மீண்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது மட்டுமே இருக்கிறது கடந்த முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நேரம் பார்த்து நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் படுத்து விட்டார் மறுபடியும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வழக்கு விசாரணை போது 7ம் தேதி.
நிச்சயம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார் ஆனால் 7ம் தேதி நேற்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகவில்லை விசாரித்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்தார்கள்.
உடனடியாக நீதிபதி நேரடியாகவே புழல் சிறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாளை அவரை நீதிமன்றத்தில் நீங்கள் ஆஜர் படுத்தப்படவில்லை என்றால் காணொளி காட்சி மூலம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் என்ன நடக்கும்
அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தால் மூன்று மதத்திற்குள் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவிடும் ஜாமீன் கிடைக்காது இதனால் செந்தில்பாலாஜி தரப்பு எவ்வளவு முயன்றும் இதுவரை ஜானின் பெறவில்லை.
இன்று சென்னை முதன்மை நீதிமன்றம் கண்டிப்பாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் நேரில் ஆஜர் படுத்துங்கள் இல்லையெனில் காணொளி காட்சி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து கொள்ளலாம் என அமலாக்க துறையை விசாரித்த போது.
காணொளி காட்சி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு நாங்கள் தயார் என தெரிவித்துள்ளது அதனால் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டால் அடுத்த மூன்று மாதத்தில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்துவிடும்.
செந்தில் பாலாஜி குற்றவாளி என தீர்ப்பு வெளியிடப்பட்டால் நிச்சயம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அதனுடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கப்படும் இதனால் அவருடைய அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும்.
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு மிக்க மகிழ்ச்சி
செந்தில் பாலாஜி 2019 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார் பல வருடங்களாக திமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கிடைக்க வில்லை திமுக வெற்றி பெற்றதும் இரண்டு முக்கிய அமைச்ச பதிவியை பெற்றுக் கொண்டார் செந்தில் பாலாஜி.
மதுவிலக்கு துறை மற்றும் மின்சார துறை இது மற்ற திமுக மூத்த நிர்வாகிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி மேலும் ஆட்சியிலும் தலையிட்டார் முக்கியமான மாவட்டங்களுக்கு இவர் சொல்வது மட்டுமே செய்ய வேண்டும் என இருந்தது.
இதனால் கோபத்திலிருந்து மூத்த நிர்வாகிகள் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் தற்போது செந்தில் பாலாஜி நிரந்தரமாக சிறையில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |