ஜெயலலிதா கருணாநிதியை விட விஜய் என்ன பெரிய தலைவரா சீமான் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை தொடங்கியுள்ளார் விஜய் மீது..!Seeman has come forward with a strong criticism of actor Vijay political stance

Seeman has come forward with a strong criticism of actor Vijay political stance

ஜெயலலிதா கருணாநிதியை விட விஜய் என்ன பெரிய தலைவரா சீமான் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை தொடங்கியுள்ளார் விஜய் மீது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி கட்சி பெயரை அறிவித்தார் அதன் பிறகு கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகப்பெரிய பொதுக்குழுவை கூட்டி கட்சியின் கொள்கை அரசியல் எதிரி உள்ளிட்டவர்களை வெளியிட்டார்.

அதில் தான் பிரச்சனை வெடித்தது விஜய் பொதுக்கூட்டத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய தம்பி என அழைத்து வந்தார் மேலும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கிறேன் என தெரிவித்தார்.

விஜயின் மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் என்னுடைய இரண்டு கண்கள் என விஜய் தெரிவித்தது சீமானுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது அதன் பிறகு சீமான் விஜயை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்.

லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்ற அளவில் விமர்சனம் சென்றது மேலும் தினம்தோறும் விஜய் மீது வன்மத்தை கக்கி வருகிறார் சீமான் இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சீமானை கடுமையாக சாடி வருகிறார்கள்.

மேலும் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் விஜயை கடுமையாக தாக்குகிறார்கள் தமிழகத்தில் இருக்கின்ற அதிமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் விஜய் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை தொடங்கியுள்ளார்கள்.

விஜயின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஆபாசமான தாக்குதல்களும் நடைபெற்ற வருகிறது இந்த நிலையில் தினமும் தொல் திருமாவளவன் மற்றும் சீமான் இரண்டு நபர்களும் விஜய் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

தொல் திருமாவளவன் பட்டும் படாமல் மறைமுகமாக தாக்குதல் நடத்துவார் ஆனால் சீமான் நேரடியாகவே விஜய் கடுமையாக சீண்டி வருகிறார் தற்போது சீமான் அளித்துள்ள பேட்டியில் நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி ஜெயலலிதாவை விட விஜய் பெரிய அரசியல்வாதி என கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜய்க்கு தான் உலகமெங்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது அல்லவா உலக வெற்றி கழகம் எனக் கட்சிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் என புது யோசனை கொடுத்துள்ளார் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து சீமான் விஜய கடுமையாக சாடி வருகிறார்.

காவல்துறை கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தலைமறைவாக உள்ளார்..!

இது குறித்து விஜய் தரப்புயிடம் கேட்டபோது யார் என்ன தாக்குதல் நடத்தினாலும் நீங்கள் வாய் திறக்க கூடாது யாரையும் பற்றி ஆபாசமாக சித்தரிக்கக் கூடாது என விஜய் தரப்பிலிருந்து தன்னுடைய ரசிகர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் அமைதியாக இருக்கிறார்கள் ஆனால் சமூக வலைத்தளங்களில் திறந்தால் சீமானை கடுமையான முறையில் கேலி கிண்டல்கள் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment